fbpx

Bank: மே 1-ம்‌ தேதி முதல் ஆக்சிஸ் வங்கி டெபிட் மற்றும் கிரெடிட் கார்டில் வரும் அதிரடி மாற்றம்…!

இந்தியாவின் முன்னணி தனியார் துறை வங்கியான ஆக்சிஸ் வங்கி, மே 1, 2024 முதல் அதன் டெபிட் மற்றும் கிரெடிட் கார்டுகளுடன் தொடர்புடைய பலன்களில் மாற்றங்களைச் செயல்படுத்த உள்ளது. இந்த மாற்றங்கள் படி, மேக்னஸ் கடன் அட்டை, டெபிட் கார்டுகளைப் பயன்படுத்துபவர்களை பாதிக்கும்.

மேலும் Burgundy டெபிட் கார்டு வைத்திருப்பவர்களுக்கு, விமான நிலைய ஓய்வறைகளுக்கான இலவச சலுகை தகுதிபெற சில நிபந்தனைகள் இப்போது பொருந்தும். மே மாதத்திற்கு முந்தைய மூன்று மாதங்களில் பயனர்கள் தங்கள் அட்டை மூலம் குறைந்தபட்சம் ரூ. 5,000 மதிப்புள்ள பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டும்.

கூடுதலாக, ஸ்வைப் மிஷின்கள் அல்லது வெளிநாடுகளில் ஆன்லைன் பிளாட்ஃபார்ம்களில் மேற்கொள்ளப்படும் சர்வதேச பரிவர்த்தனைகளுக்கு Burgundy கார்டு வைத்திருக்கும் நபர்களுக்கு டைனமிக் கரன்சி மாற்றத்திற்கான 1 சதவீத மார்க்-அப் கட்டணம் விதிக்கப்படும். இருப்பினும், புக்மைஷோ சலுகையிலிருந்து பயனடையலாம், தலா ரூ. 500 மதிப்புள்ள நான்கு டிக்கெட்டுகள் மற்றும் மாதத்திற்கு ரூ. 1,000 மதிப்புள்ள நான்கு டிக்கெட்டுகள் கிடைக்கும்.

Vignesh

Next Post

புற்றுநோய் செல்களை வேரோடு அழிக்கும் சித்தர்களின் அபூர்வ மூலிகை!…

Fri Mar 29 , 2024
நம் நாட்டில் சித்தர்களும், முன்னோர்களும் பல வகையான மூலிகைகளை கண்டுபிடித்துள்ளனர். அவற்றுள் ஒன்றாக சிறந்து விளங்குவது முடக்கத்தான் கீரை. உடலில் ஏற்படும் பல வகையான நோய்களை தீர்க்கும் வல்லமை இந்த கீரைக்கு உண்டு. முடக்கத்தான் கீரையை அடிக்கடி உணவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதோடு, புற்று நோய் செல்களுக்கு எதிராக போராடி உடலில் புற்று நோய் ஏற்படாமல் தடுக்கிறது.சொறி, சிரங்கு, படை போன்ற தோல் சம்மந்தப்பட்ட […]

You May Like