fbpx

அடி தூள்… இந்த 3 முக்கிய வங்கிகள் வைப்பு தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவிப்பு…! முழு விவரம் இதோ…

ஆக்சிஸ் வங்கி நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளது.

HDFC வங்கி உள்ளிட்ட 3 முக்கிய வங்கிகள், தங்கள் வங்கி வாடிக்கையாளர்களுக்கான நிலையான வைப்புத்தொகைக்கான வட்டி விகிதத்தை உயர்த்தி அறிவித்துள்ளது. வட்டி விகிதத்தை உயர்த்திய வங்கிகளில் ஆக்சிஸ் வங்கி, ஸ்டேட் பேங்க் ஆஃப் இந்தியா மற்றும் சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா ஆகியவை அடங்கும். 7 நாட்கள் முதல் 29 நாட்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 2.50% வட்டி விகிதத்தை வழங்குவதாக ஆக்சிஸ் வங்கி தெரிவித்துள்ளது.

ஸ்டேட் பாங்க் ஆஃப் இந்தியா பல்வேறு தவணைக்காலங்களில் வட்டி விகிதங்களை உயர்த்தி உள்ளன, அதன் படி, தற்போது பொது மக்களுக்கு 2.90% முதல் 5.65% வரையிலான வட்டி விகிதங்களுடன் 7 நாட்கள் முதல் 10 ஆண்டுகள் வரையிலான முதிர்வுகளுடன் நிலையான வைப்புகளை வழங்குகிறது. இதேபோல், சென்ட்ரல் பேங்க் ஆஃப் இந்தியா 7 நாட்கள் முதல் 555 நாட்கள் வரையிலான முதிர்வு கால அளவுள்ள நிலையான வைப்புகளுக்கு 2.75% முதல் 5.55% வரையிலான வட்டி விகிதங்களை வழங்குவதாக அறிவித்துள்ளது.

அதை தொடர்ந்து ஆக்சிஸ் வங்கி ரூ. 2 கோடிக்கும் குறைவான நிலையான வைப்புகளுக்கான வட்டி விகிதங்களை உயர்த்தியது. புதிய வட்டி விகிதங்கள் 11-ம் தேதி முதல் அமலுக்கு வருவதாகக் கூறியது. 7 நாட்கள் முதல் 29 நாட்கள் வரை முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 2.50% வட்டி விகிதத்தை தொடர்ந்து வழங்குவதாகவும், 30 நாட்கள் முதல் 3 மாதங்களில் முதிர்ச்சியடையும் நிலையான வைப்புகளுக்கு 3.00% வட்டி விகிதத்தை வங்கி வழங்கும் என்றும் வங்கி தெரிவித்துள்ளது.

Vignesh

Next Post

பெரும் அதிர்ச்சி... முக்கிய பிரபலம் உடல் நலக்குறைவால் காலமானார்..‌.! அரசியல் தலைவர்கள் இரங்கல்...!

Sun Aug 14 , 2022
பிரபல செய்தி வாசிப்பாளர் சரோஜ் நாராயணசாமி மும்பையில் உள்ள அவரது வீட்டில் காலமானார். அவருக்கு வயது 86. வயது தொடர்பான நோய்களால் காலமானார். அவர் ஒரு மகள் மற்றும் ஒரு மகன் மற்றும் அவர்களது குடும்பத்தினருடன் வாழ்கிறார். ஆல் இந்தியா ரேடியோவை ஆர்வத்துடன் கேட்பவர்கள் அவரது குரல், தெளிவான பேச்சு மற்றும் சரியான இடங்களில் இடைநிறுத்தப்பட்டதை நினைவில் கொள்வார்கள். புது தில்லி அகில இந்திய வானொலியின் செய்திச் சேவைப் பிரிவின் […]

You May Like