அயோத்தியில் உள்ள ராமர் கோயில் கும்பாபிஷேகம் நேற்றைய தினம் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. இதில் அரசியல் தலைவர்கள், நடிகர்கள் என பலரும் கலந்து கொண்டனர். இன்று முதல் பொதுமக்கள் தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுகிறது. இந்நிலையில், ராமருக்கு நகைகள் செய்வதற்கு 15 கிலோ தங்கம், 18,000 வைரங்கள் மற்றும் மரகதங்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது.
இந்த ஆபரணங்கள் அனைத்தும் அத்யாத்மா ராமாயணம், வால்மீகி ராமாயணம், ராமசரிதமானஸ் மற்றும் ஆளவந்தார் ஸ்தோத்திரம் போன்ற நூல்களை ஆய்வு செய்து அதில் உள்ள குறிப்புகளின் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ளது. அங்கூர் ஆனந்தின் லக்னோவைச் சேர்ந்த ஹர்சஹைமல் ஷியாம்லால் ஜூவல்லர்ஸ் மூலம் இந்த ஆபரணங்கள் வடிவமைக்கப்பட்டுள்ளன.
ராமர் சிலைக்கு ஒரு கிரீடம், ஒரு திலகம், நான்கு கழுத்தணிகள், ஒரு இடுப்புப் பட்டை, இரண்டு ஜோடி கணுக்கால்கள், விஜய் மாலா, இரண்டு மோதிரங்கள் என மொத்தம் 14 வகைகளை கொண்ட இந்த நகைகள் 12 நாட்களில் செய்து முடிக்கப்பட்டுள்ளன. குழந்தை ராமரின் கிரீடம் மட்டும் 75 காரட் வைரங்கள், 175 காரட் ஜாம்பியன் மரகதங்கள் மற்றும் 262 காரட் மாணிக்கங்களுடன் தோராயமாக 1.7 கிலோ எடை கொண்டது. இது ராமரின் சூர்யவன்ஷி பரம்பரையைக் குறிக்கும் சூரிய பகவானின் சின்னத்தை வெளிப்படுத்துகிறது.