fbpx

அயோத்தி ராமர் கோவில் குடமுழுக்கு!… சீதைக்கு பிறந்த வீட்டு சீதனம் கொண்டுவரும் மக்கள்!… ஆடைகள் முதல் ஆபரணங்கள் வரை!

பலகட்ட சட்டப் போராட்டங்களுக்கு பிறகு உத்தர பிரதேச மாநிலம் அயோத்தியில் ராமர் கோவில் கட்ட உச்சநீதிமன்றம் உத்தரவிடப்பட்டது. இதையடுத்து, அயோத்தியில் ராமர் கோவில் கட்டும் பணிக்காக ஸ்ரீ ராம் ஜென்மபூமி தீர்த்த சேத்ரா அறக்கட்டளை உருவாக்கப்பட்டது. அதன்பிறகு 2020 ஆகஸ்ட் மாதம் ராமர் கோவில் கட்ட பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். ரூ.1000 கோடி செலவில் பிரமாண்டமாக கோவில் கட்டப்பட்டு வருகிறது. 3 அடுக்குகளாக நாகரா கட்டகலைக்கலை நுட்பத்தில் இந்த கோவில் கட்டப்பட்டு வருகிறது.

இதையடுத்து, 2024ம் ஆண்டு ஜனவரி மாதம் 22ம் தேதி ராமர் கோவில் கும்பாபிஷேகத்துடன் திறக்கப்பட உள்ளது. அன்றைய தினம் கோவில் கருவறையில் ராமர் சிலை நிறுவி குடமுழுக்கு விழா நடைபெற உள்ளது. குடமுழுக்கு விழாவுக்கான தொடக்க நிகழ்ச்சிகள் ஜனவரி 16ம் தேதி தொடங்கி நடைபெற உள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்க உள்ளார். இதுதவிர 3 ஆயிரம் விவிஐபிக்கள், மடாதிபதிகள், சாமியார்கள் என 4 ஆயிரம் பேர் பங்கேற்க உள்ளனர். மேலும் 50 நாடுகளின் பிரதிநிதிகளும் பங்கேற்க உள்ளனர்.

இந்தநிலையில், அயோத்தி ராமர் கோவிலுக்கு சிதையின் பிறந்து வீட்டு சீதனமாக ஆடை ஆபரணங்கள் அனுப்பி வைக்கப்பட உள்ளது. அதாவது, பீகார் மாநிலம் சீதாமர்ஹியில் சீதை பிறந்தததாகவும், நேபாளம் மாநிலம் ஜனக்பூரில் பிறந்ததாகவும் 2 விதமான கருத்துகள் உள்ளன. இந்த 2 இடங்களிலும் சீதைக்கு கோவில் கட்டப்பட்டு வழிபாடு நடத்தப்பட்டு வருகிறது.

இந்நிலையில் சீதையின் பிறந்த இடமாக கருதப்படும் நேபாளத்தின் ஜனக்பூரில் இருந்து ராமர் கோவில் திறப்பு விழாவையொட்டி சீதனம் கொண்டு வரப்பட உள்ளது. வனவாசம் காரணமாக ராமர் இருக்கும் இடம் தான் சீதைக்கு அயோத்தி என புராணங்களில் கூறப்படுகிறது. ஆனால் பல போராட்டங்களுக்கு பிறகு அயோத்தியில் பிரமாண்டமாக ராமர் கோவில் கட்டப்படும் நிலையில் சீதையின் இல்லத்துக்கு (ராமர் கோவில்) சீதனம் அனுப்புவதாக ஜனக்பூரை சேர்ந்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

அதன்படி 500க்கும் அதிகமானவர்கள் ஜனக்பூரில் இருந்து அயோத்திக்கு வருகின்றனர். இவர்கள் ஜனவரி 3ம் தேதி புறப்பட்டு வருகின்றனர். அப்போது சீதனமாக பழங்கள், இனிப்பு வகைகள், வேஷ்டி சட்டை உள்ளிட்ட உடைகள் மற்றும் ஆபரணங்களை எடுத்து வருகின்றனர். ஜனவரி 6ம் தேதி அவர்கள் சீதனமாக கொண்டு வந்த பொருட்களை ராம் ஜென்மபூமி அறக்கட்டளை நிர்வாகிகளிடம் முறைப்படி ஒப்படைக்க உள்ளனர்.

Kokila

Next Post

எண்ணூர் அமோனியா வாயு கசிவு!… தொழிற்சாலையை மூட உத்தரவு!… தமிழக அரசு அதிரடி நடவடிக்கை!

Thu Dec 28 , 2023
சென்னை எண்ணூர் பகுதியில் அமோனியா வாயு கசிவால் மூச்சுத்திணறல் ஏற்பட்டு மக்கள் சிகிச்சை பெற்றுவரும் நிலையில், உர உற்பத்தி ஆலையை மூட தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சமீபத்தில் வந்த மிக்ஜாம் புயல் காரணமாக ஏற்பட்ட வெள்ளத்தில், சென்னையின் அனைத்து பகுதிகளும் மீண்டு விட்டன. ஆனால், எண்ணூர் பகுதி மட்டும் இன்னும் இதிலிருந்து மீளவில்லை. காரணம் கச்சா எண்ணெய் கழிவுகள்தான். எண்ணூர் பகுதியில் கச்சா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலைகள் இருக்கின்றன. மழை […]

You May Like