fbpx

ஆயுதபூஜை விடுமுறை..!! யாருமே லீவு எடுக்கக் கூடாது..!! மீறினால் ஒழுங்கு நடவடிக்கை..!! தமிழ்நாடு அரசு அதிரடி..!!

ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.

நவராத்திரி பண்டிகை களைகட்டியுள்ளது. ஆயுதபூஜை, விஜயதசமியை முன்னிட்டு 4 நாட்கள் தொடர் விடுமுறை வருவதால் வெளியூரில் வசிக்கும் மக்கள் சொந்த ஊர் செல்வார்கள். கூட்ட நெரிசலை தவிர்ப்பதற்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. தினசரி சென்னையிலிருந்து பல்வேறு பகுதிகளுக்கு 2,100 பேருந்துகள் இயக்கப்படும் நிலையில், தற்போது கூடுதலாக 2,265 பேருந்துகள் இயக்கப்படுகிறது.

இந்நிலையில், ஆயுதபூஜை விடுமுறையை முன்னிட்டு தமிழ்நாடு அரசு பேருந்து ஓட்டுநர்கள், நடத்துநர்கள் விடுப்பு எடுக்கக்கூடாது என போக்குவரத்துத்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. வார ஓய்வும் எடுக்கக்கூடாது. அதையும் மீறி எடுத்தால் துறை ரீதியாக ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. போக்குவரத்துத்துறை வெளியிட்டுள்ள சுற்றறிக்கையில், ஆயுதபூஜை, தொடர் விடுமுறையை முன்னிட்டு பயணிகளுக்காக சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட உள்ளது.

அனைத்து ஓட்டுநர்களும் நடத்துனர்களும் தவறாமல் பணிக்கு வந்து பணி செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். மேற்கண்ட நாட்களில் பணிக்கு வராதவர்களுக்கு வார விடுப்பு உள்ளிட்ட விடுப்புகள் வழங்க இயலாது. மேலும், பணிக்கு வராதவர்களுக்கு ஆப்ஷன் ரிப்போர்ட் அனுப்பி சட்டப்பிரிவின் மூலம் தக்க ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும் என்ற எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

தொடங்கப்போகுது வடகிழக்கு பருவமழை..!! இந்த முறை இரண்டா..? எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம்..!!

Thu Oct 19 , 2023
வடகிழக்குப் பருவமழை அடுத்து வரும் 3 தினங்களில் தென்னிந்தியப் பகுதிகளில் துவங்கும் என்றும் ஆனால், எதிர்பார்த்த அளவிற்கு மழைப் பொழிவு இருக்காது என்றும் வானிலை ஆய்வு மையத்தின் தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், “இந்த ஆண்டுக்கான தென் மேற்கு பருவமழை இந்தியப் பகுதிகளில் இன்றுடன் நிறைவடைகிறது. தற்போது கிழக்கு மற்றும் வடகிழக்கு திசைகளில் இருந்து, தென்னிந்தியப் பகுதிகளில் காற்று வீசக்கூடிய நிலையில், வடகிழக்குப் பருவமழை அடுத்து […]

You May Like