ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெற இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா வழங்கப்படும்.
ஆயுஷ் மருத்துவ முறையின் கீழ் சிகிச்சை பெறுவதற்காக இந்தியாவுக்கு வருகை தரும் வெளிநாட்டினருக்கு ஆயுஷ் விசா என்ற தனி பிரிவை அரசு 2023 ஜூலை 27 அன்று அறிமுகப்படுத்தியுள்ளது. ஆயுஷ் விசா நான்கு துணை வகைகளின் கீழ் கிடைக்கிறது: (i) ஆயுஷ் விசா (AY-1), (ii) ஆயுஷ் உதவியாளர் விசா (AY2), (iii) இ-ஆயுஷ் விசா மற்றும் (iv) இ-ஆயுஷ் உதவியாளர் விசா வழங்கப்படும்.
ஆயுஷ் விசா ஆயுஷ் அமைப்புகள் மூலம் சிகிச்சை பெறுவதை ஒரே நோக்கமாகக் கொண்டு இந்தியாவுக்கு வரும் ஒரு வெளிநாட்டவருக்கு வழங்கப்படுகிறது. அரசு அமைப்புகள் அல்லது மருத்துவமனை & சுகாதார சேவை வழங்குபவர்களுக்கான தேசிய அங்கீகரிப்பு வாரியம் அல்லது ஹோமியோபதிக்கான தேசிய ஆணையம் அல்லது இந்திய மருத்துவ முறைகளுக்கான தேசிய ஆணையம் ஆகியவற்றில் பதிவு செய்துள்ள மருத்துவமனை/நல்வாழ்வு மையத்தில் சிகிச்சை பெற வருகை புரிபவர்களுக்கு ஆயுஷ் விசா வழங்கப்படுகிறது.
04.12.2024 வரை மொத்தம் 123 வழக்கமான ஆயுஷ் விசா, 221 இ-ஆயுஷ் விசா மற்றும் 17 இ-ஆயுஷ் உதவியாளர் விசாக்கள் வழங்கப்பட்டுள்ளன.சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் மருத்துவ மதிப்பு பயணத்திற்கான இந்தியாவின் அதிகாரப்பூர்வ தளத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்தியாவில் மருத்துவ பராமரிப்பு அல்லது ஆரோக்கிய சேவைகளை நாடும் எந்தவொரு சர்வதேச நோயாளியும் வருகை தருவதன் மூலம் அட்வான்டேஜ் ஹெல்த்கேர் இந்தியா www.healinindia.gov.in என்ற இணையதளத்தில் பார்வையிடலாம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது.