fbpx

ஐயப்ப பக்தர்களே ரெட் அலர்ட்!… கேரளாவில் கனமழை தொடரும்!… வானிலை மையம் எச்சரிக்கை!

கேரளளாவின் சபரிமலை அமைந்துள்ள பத்தனம்திட்டா மாவட்டத்துக்கு ரெட் அலர்ட் அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவனந்தபுரம் மற்றும் இடுக்கி மாவட்டங்களில் ஆரஞ்சு எச்சரிக்கை விடுத்துள்ளது. கண்ணூர் மற்றும் காசர்கோடு தவிர மற்ற அனைத்து மாவட்டங்களிலும் மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்திய வானிலை ஆய்வு மையம் மாலையில் வெளியிட்டுள்ள அறிக்கையில், அடுத்த 5 நாட்களுக்கு கேரளாவில் இடி மற்றும் மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக தெரிவித்துள்ளது. நவம்பர் 22 முதல் 24 வரை மாநிலத்தில் சில இடங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக திருவனந்தபுரம், கொல்லம், ஆலப்புழா, பத்தனம்திட்டா, கோட்டயம், இடுக்கி, எர்ணாகுளம், திருச்சூர், பாலக்காடு, மலப்புரம், கோழிக்கோடு, வயநாடு மற்றும் கண்ணூர் ஆகிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் என்றும் பலத்த காற்று வீசும் என்றும் கூறப்பட்டுள்ளது. பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள சபரிமலை ஐயப்பன் கோயிலில் வருடாந்திர மண்டலம் மற்றும் மகரவிளக்கு பூஜைக்காக நடை திறக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சபரிமலை ஐயப்பன் கோயிலுக்குச் சென்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் செவ்வாய்க்கிழமை பெய்த கனமழையால் சிரமங்களைச் சந்தித்துள்ளனர்.

ரெட் அலர்ட் என்பது 24 மணி நேரத்தில் 20 செ.மீ.க்கு மேல் கனமழை முதல் மிக கனமழை பெய்யும் என்பதைக் குறிக்கும். ஆரஞ்சு அலர்ட் என்றால் 6 செ.மீ முதல் 20 செ.மீ வரை மிக கனமழை பெய்யும் என்று பொருள். மஞ்சள் எச்சரிக்கை விடுக்கப்பட்டால் 6 முதல் 11 செமீ வரை கனமழை பெய்யக்கூடும்.

Kokila

Next Post

இந்து மத சடங்குகளில் எலுமிச்சை பழம் அதிகம் பயன்படுத்துவதற்கான காரணம் என்ன தெரியுமா.?

Thu Nov 23 , 2023
இந்து மத சடங்குகளிலும் சம்பிரதாயங்களிலும் அதிகமாக பயன்படுத்தப்படும் பழமாக இருப்பது எலுமிச்சை ஆகும். சாமிக்கு மாலை அணிவிப்பதாக இருந்தாலும் அதில் எலுமிச்சை இருக்கும். மேலும் புது வீடு கிரகப்பிரவேசம் செய்வதென்றாலும் வாசலில் எலுமிச்சம் பழத்தை கட்டி தொங்க விட்டிருப்பார்கள். புதிதாக வாகனம் வாங்கினாலும் அதன் சக்கரத்தில் எலுமிச்சை பழத்தை வைத்து ஏற்றி இறக்குவது மரபாக இருக்கிறது. இப்படி கடவுளுக்கு பூஜை செய்வது முதல் நமது ஒவ்வொரு காரியங்களிலும் எலுமிச்சை ஏன் […]

You May Like