fbpx

மீண்டும் தமிழகத்தை நோக்கி..!! 24 மணி நேரத்தில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி..!! இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவிப்பு..!!

தெற்கு அந்தமான் கடல் பகுதியில் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி உருவாகியுள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இது, அடுத்த 24 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறும் என்று கணிக்கப்பட்டுள்ளது. அடுத்த 48 மணி நேரத்தில் இது மேற்கு – வட மேற்கு திசையில் தமிழகத்தை நோக்கி நகரும் என வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. இதன் காரணமாக வரும் 16ஆம் தேதி முதல் 3 நாட்களுக்கு கனமழை பெய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

11 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

இந்நிலையில் தமிழ்நாட்டில் அடுத்த 2 மணி நேரத்தில் 11 மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி, தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, புதுக்கோட்டை, கன்னியாகுமரி, நெல்லை, தென்காசி, தூத்துக்குடி, ராமநாதபுரம், விருதுநகரில் மழைக்கு வாய்ப்புள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read More : ”என் பொண்டாட்டி கூட”..!! ”என்கிட்ட ஆதாரம் இருக்கு”..!! சௌந்தர்யாவுக்கு பிஆர் வேலை..!! விஷ்ணுவை மிரட்டிய பிக்பாஸ் ரவீந்தர்..!!

English Summary

The India Meteorological Department has reported that an atmospheric circulation has formed in the South Andaman Sea.

Chella

Next Post

கைதுக்கு காரணமான அல்லு அர்ஜுனின் அந்த ‘சைகை’!. கைது குறித்து தெலுங்கானா போலீசார் கூறியது என்ன தெரியுமா?

Sat Dec 14 , 2024
Allu Arjun: ‘புஷ்பா 2’ படத்தின் பிரீமியர் ஷோ பார்க்கச் சென்று ரசிகர்கள் கூட்டத்தில் சிக்கி பாஸ்கர் என்பவரின் மனைவி ரேவதி (39) உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அல்லு அர்ஜுன் கைது செய்யப்பட்ட சம்பவம், திரையுலகில் பெரும் பேசுபொருளாகியிருக்கிறது. இந்தச் சம்பவத்தில் அல்லு அர்ஜுன் ஹைதராபாத்தில் உள்ள சந்தியா திரையரங்கிற்கு வருவது குறித்து முறையாகக் காவல்துறைக்குத் தகவல் கொடுக்காத திரையரங்க உரிமையாளர்கள் மீதும், முன் அறிவிப்பின்றி திடீரென வந்து கூட்ட […]

You May Like