fbpx

பகீர்!. “நடிகைகளுடன் உறவுகள் தேவை”!. ருதுராஜுக்காக கொந்தளித்த பத்ரிநாத்!. பிசிசிஐ மீது காட்டம்!

Badrinath: இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணி, இலங்கையில் சுற்றுப்பயணம் செய்து 3 டி20 , 3 ஒருநாள் போட்டியில் விளையாடுகிறது. இந்த டி20 மற்றும் ஒருநாள் தொடருக்கான இந்திய அணி அறிவிக்கப்பட்டுள்ளது. ஒருநாள் தொடருக்கான இந்திய அணிக்கு ரோகித் சர்மா கேப்டனாகவும் டி20 அணிக்கு சூர்யகுமார் யாதவ் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளனர். இந்த தொடரில் ருதுராஜ் இடம் பெறாதது ரசிகர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. முன்னதாக ஜிம்பாப்வே தொடரில் 3 போட்டிகளில் விளையாடிய ருதுராஜ் ஒரு அரை சதம் மற்றும் ஒரு போட்டியில் 49 ரன்கள் குவித்திருந்தார்.

இந்நிலையில் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாததை முன்னாள் வீரர் கிருஷ்ணமாச்சாரி ஸ்ரீகாந்த் விமர்சித்து பேசியிருந்தார். அதேபோல் இந்திய அணியில் ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது குறித்து முன்னாள் இந்திய வீரர் சுப்பிரமணியம் பத்ரிநாத் ஆதங்கத்துடன் பேசியுள்ளார். இது பற்றி தனது யூடியூப் பக்கத்தில் பேசிய அவர், “ருதுராஜ் தேர்வு செய்யப்படாதது ஆச்சரியமாக இருக்கிறது. ஏனெனில் அவர் இந்தியாவுக்காகவும் உள்ளூர் தொடர்களில் ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணிக்காகவும் சிறப்பாக செயல்பட்டுள்ளார். அப்படிப்பட்ட அவரை நீக்குவதற்கு எந்த காரணமும் இல்லை.

சர்வதேச டி20 கிரிக்கெட்டில் கடைசி 7 இன்னிங்ஸில் அவர் 71.2 என்ற அபாரமான சராசரியில் 158.7 என்ற ஸ்ட்ரைக் ரேட்டில் ரன்கள் குவித்தார். அப்படி கடந்த சில வருடங்களாகவே அவர் தொடர்ந்து ரன்கள் மேல் ரன்கள் அடித்துள்ளார். ஆனாலும் தேர்வு செய்யப்படாததற்கான காரணம் தெரியாததால் ருதுராஜ்க்கு நியாயம் வேண்டும் என்று நான் வெளிப்படையாகவே கேட்கிறேன். அவரை எடுக்காதது மிகப்பெரிய தவறு. அது எனக்கு ஏமாற்றமாக அமைந்துள்ளது.

மறுபுறம் சுப்மன் கில் துணை கேப்டனாக நியமிக்கப்பட்டதை என்னால் புரிந்து கொள்ள முடியவில்லை. விராட்கோலி , ரோகித்துடன் நானும் விளையாடியுள்ளேன். அவர்களிடம் பேட்டிங்கில் எக்ஸ்ட்ரா திறமை இருந்தது. ஆனால் அவர்களைப் போல கில்லையும் சிலர் தத்தெடுத்து வளர்க்க நினைக்கின்றனர்.

ரியான் பராக்கிற்கு பதிலாக ருதுராஜ் தேர்வு செய்யப்பட்டிருக்க வேண்டும். ஆனால் ருதுராஜ், ரிங்கு போன்ற வீரர்கள் கழற்றி விடுவதை பார்க்கும் போது எனக்கு ஒன்று தோன்றுகிறது. அதாவது நீங்கள் ஏதாவது நடிகைகளுடன் தொடர்பிலிருந்து கிசுகிசுக்களை வைத்துக் கொள்ள வேண்டும். வித்தியாசமாக உடலில் டாட்டூ குத்திக்கொள்ள வேண்டும். சொந்தப் புகழை பெருமை பேசுவதற்காக பிஆர் ஏஜென்சியை வைத்துக் கொள்ள வேண்டும்.

கிரிக்கெட்டில் நன்றாக விளையாடத் தெரிவதுடன் இந்தியாவுக்காக விளையாட இப்போதெல்லாம் இந்த 3 விஷயங்களை வைத்திருப்பது அவசியமாகிறது. அப்போது தான் உங்களால் பெரியாளாக வர முடியும் போல” என்று காட்டமாக பேசியுள்ளார்.

Readmore: பாத்ரூமில் நீண்ட நேரம் செலவிடுவதற்கு இப்படி ஒரு காரணமா..? ஆய்வு முடிவில் வெளியான அதிர்ச்சி தகவல்..!!

English Summary

Bagheer! “Relationships with actresses needed”!. Badrinath upset for Ruduraj! Show on BCCI!

Kokila

Next Post

இலவச சூரிய சக்தி திட்டத்தின் கீழ் மின் விநியோகம்...! வழிகாட்டி நெறிமுறைகள் வெளியீடு....!

Tue Jul 23 , 2024
Electricity supply under Free Solar Scheme

You May Like