அசாம் மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்ட நிலையில், இது உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.
அசாம் மாநிலத்தில் ஹிமந்தா பிஸ்வா சர்மா தலைமையிலான பாஜக ஆட்சி நடைபெற்று வருகிறது. முன்னதாக அமைச்சரவைக் கூட்டத்தில் மாட்டிறைச்சி தொடர்பாக முடிவு எடுக்கப்பட்டதாக முதல்வர் ஹிமந்தா பிஸ்வா சர்மா கூறினார். இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ”அசாம் மாநிலத்தில் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுகிறது.
கோயில் போன்ற வழிபாட்டுத் தலங்களைச் சுற்றியுள்ள 5 கிமீ சுற்றளவில் மாட்டிறைச்சிக்கு முன்பு தடை விதிக்கப்பட்டிருந்தது. தற்போது நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இந்தக் கட்டுப்பாட்டை மேலும் அதிகரிக்க முடிவு செய்யப்பட்டது. எனவே, மாநிலம் முழுவதும் பொது இடங்களில் மாட்டிறைச்சி உண்ண தடை விதிக்கப்படுகிறது.
இந்தக் கட்டுப்பாடு மாநிலம் முழுவதும் உள்ள உணவகம், விடுதி மற்றும் உள்ளூர் கொண்டாட்ட நிகழ்வு உள்ளிட்ட அனைத்திற்கும் பொருந்தும். இந்த விதிகளை மீறினால், சட்டத்திற்குட்பட்டு தண்டிக்கப்படுவர். அசாமில் மாட்டிறைச்சிக்குத் தடை விதிக்க வேண்டும் என மாநில காங்கிரஸ் தலைவர்கள் உள்பட பலர் கருத்துகளைத் தெரிவிக்கின்றனர். ஆனால், இதற்கு முன்பே நாங்கள் கட்டுப்பாடு விதித்துள்ளோம்” என்றார்.
Read More : பத்திரப்பதிவு செய்வோருக்கு செம குட் நியூஸ்..!! இன்று சுபமுகூர்த்த தினம்..!! கூடுதல் டோக்கன் விநியோகம்..!!