fbpx

Poll: ஏப்ரல் 19 முதல் ஜூன் 1 வரை கருத்து கணிப்பு வெளியிட தடை…! தேர்தல் ஆணையம் உத்தரவு…!

ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவற்றிற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது தேர்தல் ஆணையம்.

இது தொடர்பாக தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: தமிழக மக்களவைப் பொதுத் தேர்தல்கள், 2024 மற்றும் விளவங்கோடு சட்டமன்றத் தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்குப்பதிவு ஏப்ரல் 19 அன்று காலை 7 மணி முதல் மாலை 6 மணி வரை நடைபெறும். ஏப்ரல் 19 காலை 7 மணியிலிருந்து ஜூன் 1-ம் தேதி மாலை 6.30 மணி வரை, வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவது மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவது அல்லது வேறு ஏதேனும் முறையில் பரப்புவது ஆகியவை தடை செய்யப்பட்டுள்ளது.

1951 ஆம் ஆண்டு, மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் 126Aஆம் பிரிவின் விதித்துறைகளின்படி, (1) எந்தவொரு நபரும் வாக்குப்பதிவுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகளை நடத்துவதோ மற்றும் அதனை அச்சு ஊடகம் அல்லது மின்னணு ஊடகம் வாயிலாக வெளியிடுவதோ அல்லது வேறு ஏதேனும் முறையில், அது எதுவாயினும், பரப்பவோ கூடாது என்று இந்திய தேர்தல் ஆணையத்தினால் இதுசம்பந்தமாக அறிவிக்கப்படலாம்.

ஒரு பொதுத் தேர்தலின்போது, வாக்குப்பதிவு முதல் நாளில் வாக்குப்பதிவுக்கு நிர்ணயிக்கப்பட்ட நேரத்தின் தொடக்கம் முதல் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் வாக்குப்பதிவு முடிந்தபின் அரை மணிநேரம் வரை தொடரலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Vignesh

Next Post

Result: வெளியான தேர்வு முடிவுகள்...! மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு...!

Thu Apr 4 , 2024
2023, செப்டம்பர் 3 அன்று நடைபெற்ற தேசிய பாதுகாப்பு அகாடமி, கடற்படை அகாடமி தேர்வு (II)-2023 ஆகியவற்றின் இறுதி முடிவுகளை மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது. மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையத்தால் 2023, செப்டம்பர் 3 அன்று நடத்தப்பட்ட எழுத்துத் தேர்வு முடிவுகளைத் தொடர்ந்து, ராணுவம், கடற்படை, விமானப்படை பிரிவுகளில் ஆள் சேர்க்க தேசிய பாதுகாப்பு அகாடமியின் பணியாளர் தேர்வு வாரியம் நடத்திய நேர்காணல் மற்றும் கடற்படை அகாடமி […]

You May Like