fbpx

விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனை செய்ய தடை.. மாநகராட்சி உத்தரவு…

விநாயகர் சதுர்த்தி அன்று இறைச்சி விற்பனை செய்ய தடை விதித்து பெங்களூரு மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது..

நாடு முழுவதும் வரும் 31-ம் தேதி விநாயகர் சதுர்த்தி கொண்டாடப்படுகிறது.. இதை முன்னிட்டு பெங்களூரு மாநகராட்சியில் இறைச்சி விற்பனைக்குக் தடை விதிக்கப்பட்டுள்ளது.. மாநகராட்சி வரம்புகளுக்குள் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் இந்த தடை பொருந்தும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது..

இதுகுறித்து மாநகராட்சி அனுப்பி உள்ள சுற்றறிக்கையில் ” ஆகஸ்ட் 31 விநாயகர் சதுர்த்தி” பெங்களூரு மாநகராட்சியில் உள்ள விற்பனைக் கூடங்களில் விலங்குகளை அறுப்பதும், இறைச்சி விற்பனை செய்வதும் முற்றிலும் தடை செய்யப்பட்டுள்ளது..” என்று தெரிவித்துள்ளது.

இந்த மாத தொடக்கத்தில், ஸ்ரீ கிருஷ்ண ஜெயந்தி கொண்டாடப்பட்ட நிலையில், அன்றைய தினமும், இறைச்சி விற்பனை தடை செய்யப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

ஓட ஓட விரட்டி கல்லால் அடித்து கொலை... தாயை கிண்டல் செய்தவரின் உடலை தாயின் காலடியில் போட்ட மகன்..!

Mon Aug 29 , 2022
ஆந்திரமாநிலம் விசாகப்பட்டினம் பகுதியை சேரந்த சீனு என்பவர் அப்பகுதியை சேர்ந்த ஒரு பெண்ணை மதுபோதையில் கிண்டல் செய்துள்ளார். இதனால் மன உளைச்சலுக்கு உள்ளான, அந்த பெண், இந்த சம்பவம் பற்றி தனது மகனிடம் கூறியுள்ளார். இதனால் ஆத்திரம் அடைந்த மகன், தனது தாயை பைக்கில் ஏற்றிக் கொண்டு சீனு இருக்கும் இடத்திற்கு வந்துள்ளார். அவரை பார்த்தவுடன் பயத்தில் சீனு அங்கிருந்து தப்பி ஓடினார். இருந்தும், விடாமல் அவரை துரத்தி சென்ற […]

You May Like