fbpx

கண்களுக்கு கீழ் கருவளையமா.? கவலை வேண்டாம்.! வாழைப்பழ தோல் போதும் கருவளையம் காணாமல் போகும்.!

கண்கள் உடலின் பிரதான உறுப்புகளில் முக்கியமானது. சிலருக்கு கண்களின் கீழ் மற்றும் கண்களை சுற்றிலும் கருவளையம் தோன்றும். இதனால் கண்கள் பொலிவிழந்து காணப்படும். இந்த கருவளையம் தோன்றுவதற்கு பெரும்பாலான காரணங்கள் சொல்லப்படுகிறது. குறிப்பாக அதிக நேரம் கம்ப்யூட்டர் மற்றும் செல்போன் பயன்படுத்துவதும் போதுமான தூக்கம் இல்லாததும் முக்கிய காரணங்களாக கூறப்படுகின்றன. எனினும் மன அழுத்தம் மற்றும் நீர்ச்சத்து குறைபாடு ஏற்பட்டாலும் கண்களில் கருவளையம் தோன்றலாம் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்.

இந்த கருவளையம் பெரும்பாலும் நமது வாழ்க்கை முறையில் சில மாற்றங்களை செய்தாலே மறைந்துவிடும். எனினும் சிலருக்கு இது மறையாமல் இருக்கும். இந்த கருவளையத்தை எளிதாக மறையச் செய்வதற்குரிய கை வைத்தியங்களை இந்த பதிவில் பார்ப்போம். கருவளையத்தை எளிதில் போக்குவதற்குரிய வழி பச்சை வாழைப்பழத்தின் தோள்களில் இருக்கிறது. பச்சை வாழைப்பழத்தின் தோலை எடுத்து அதில் சிறிதளவு விளக்கெண்ணெய் தடவி கண்களை சுற்றி தேய்த்து இருவது நிமிடம் ஊற வைத்து பின்பு கழுவ வேண்டும். இதனை ஒரு வாரம் தொடர்ச்சியாக செய்து வர கண்களை சுற்றி இருக்கும் கருவளையம் மறைந்து கண்கள் அழகாக மாறும்.

மேலும் கருவளையத்தை போக்குவதற்கு உருளைக்கிழங்கு சாறு ஒரு சிறந்த மருந்தாகும். உருளைக்கிழங்கு சாறை ஒரு பஞ்சியில் எடுத்து கண்களை சுற்றி தேய்த்து வர கருவளையம் மறையும். மேலும் எலுமிச்சை சாறு மற்றும் தக்காளி சாறை ஒன்றாக கலந்து கருவளையம் இருக்கும் பகுதிகளில் தேய்த்து வந்தால் நல்ல மாற்றம் கிடைக்கும். கருவளையத்தை போக்குவதற்கு கிரீன் டீ ஒரு சிறந்த மருந்தாகும். நான்கு ஸ்பூன் கிரீன் டீ எடுத்து அதனை நீரில் ஊற வைத்து டிகாஷன் எடுத்துக் கொள்ள வேண்டும். இதனுடன் இரண்டு டீஸ்பூன் சர்க்கரை சேர்த்து நன்றாக கலந்த பின்னர் இவற்றில் ஒரு காட்டன் துணியை நனைத்து கண்களை சுற்றி தடவி வர கருவளையம் மறையும்.

Next Post

உங்களுக்கு ஜென்ம சாபம் இருக்கா.? விடுபட வேண்டுமா.? சித்தர்களால் கூறப்பட்ட எளிய பரிகாரம் இதோ.!

Wed Dec 13 , 2023
துன்பத்திலும் வேதனையிலும் இருக்கும் ஒரு ஒரு மனிதனின் வயிற்றெரிச்சல் வார்த்தைகளாக வரும்போது அதுவே சாபமாகிறது. சாஸ்திரங்களின்படி பத்து வகையான சாபங்கள் இருப்பதாக சொல்லப்படுகிறது. அவை பெண் சாபம் பிரேத சாபம் பிரம்ம சாபம் சர்ப்ப சாபம் பூமி சாபம் கங்கா சாபம் என இந்த சாபங்களை வகைப்படுத்துகின்றனர். எதை வாங்கினாலும் கொடுத்தாலும் ஒருவரிடம் இருந்து வாங்க கூடாததும் ஒருவருக்கு கொடுக்கக் கூடாதும் சாபமாகும். சில நேரங்களில் பெற்றோருக்கும் வீட்டில் இருந்து […]

You May Like