fbpx

“கோவாக்சின் தடுப்பூசி போட்டவர்களுக்கு பக்க விளைவு” ஆய்வுக்கு ஒப்புதல் பெறவில்லை – ICMR விளக்கம்!

கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகம் நடத்திய ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது.

கோவாக்ஸின் தடுப்பூசியை இந்தியாவில் உள்ள பாரத் பயோடெக் நிறுவனம் தயாரித்து வழங்கி வந்தது. இந்தத் தடுப்பூசி போட்டவர்களுக்கு சில உடல்நல பாதிப்புகள் வரலாம் என பனராஸ் ஹிந்து பல்கலைக்கழகம் கடந்த ஓராண்டாக நடத்திய ஆய்வில் தெரிய வந்துள்ளது.

அந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது, “ஆய்வில் பங்கேற்ற 926 பேரில் கிட்டத்தட்ட 50 சதவீதம் பேர் பின்தொடர்தல் காலத்தில் ஆரோக்கியத்தில் சில பாதிப்புகளை பதிவு செய்துள்ளனர்.  பக்கவாதம் உள்ளிட்ட கடுமையான பக்கவிளைவு ஒரு சதவீத நபர்களில் பதிவாகியுள்ளதாகவும் இளம் பருவத்தினர் மற்றும் பெரியவர்களில் தடுப்பூசியின் நீண்டகால பாதுகாப்பைப் பார்த்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தனிநபர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கு உடல் ஆரோக்கியம் பாதிக்கப்பட்டது. புதிதாகத் தொடங்கிய தோல் மற்றும் அதுதொடர்பான கோளாறுகள், பொதுவான கோளாறுகள் மற்றும் நரம்பு மண்டலக் கோளாறுகள் ஆகியவை தடுப்பூசி பெற்ற பிறகு இளம் பருவத்தினரிடையே காணப்பட்ட மூன்று பொதுவான பாதிப்புகள் “என்று ஜனவரி 2022 முதல் ஆகஸ்ட் 2023 வரை நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த நிலையில், கோவாக்சின் தடுப்பூசி குறித்த பனாரஸ் இந்து பல்கலைகழகத்தின் ஆய்வுக்கு தங்களிடம் ஒப்புதல் எதுவும் பெறவில்லை என ஐசிஎம்ஆர் விளக்கம் அளித்துள்ளது. சீரற்ற ஆய்வு முறைகள் பயன்படுத்தப்பட்டதாக விளக்கமளித்துள்ள ஐசிஎம்ஆர் அந்த ஆய்வு முடிவை திரும்ப பெற வேண்டும் என தெரிவித்துள்ளது.  மேலும், ஆய்வு முடிவுகள் திரும்பப் பெறப்படாவிட்டால்,  சட்ட மற்றும் நிர்வாக நடவடிக்கை எடுக்கப்படும் என ஐசிஎம்ஆர் எச்சரித்துள்ளது.

ஐசிஎம்ஆர் அமைப்பு இந்த ஆய்வுகளுக்கு எந்த விதமான உதவிகளையும்,  பங்களிப்பையும் செய்யாத நிலையில் தங்கள் பெயரை ஏன் ஆய்வு முடிவுகளில் பயன்படுத்தி இருக்கிறீர்கள் என பனாரஸ் இந்து பல்கலைக்கழக ஆய்வு குழுவினருக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.  மேலும் தங்களது பெயரை உடனடியாக ஆய்வில் இருந்து நீக்கவில்லை என்றால் சட்ட நடவடிக்கைகளுக்கு ஆளாக வேண்டியது வரும் எனவும் ஐசிஎம்ஆர்  எச்சரிக்கை விடுத்துள்ளது.

’அடையாளமே தெரியல’..!! நீண்ட நேர போராட்டத்திற்கு பின் அதிபரின் உடல் மீட்பு..!!

Next Post

Ebrahim Raisi | ஈரான் அதிபர் உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட அதிர்ச்சி வீடியோ..!! இம்ராஹிம் ரைசியின் கடைசி தருணம்..!!

Mon May 20 , 2024
ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி உயிரிழப்பதற்கு முன் எடுக்கப்பட்ட வீடியோ காட்சிகள் இணையத்தில் வெளியாகி உள்ளன. Ebrahim Raisi | ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசி நேற்று ஈரான் – அர்பைஜான் எல்லை பகுதியில் நிகழ்ந்த ஹெலிகாப்டர் விபத்தில் உயிரிழந்தார். இவருடன் வெளியுறவு அமைச்சர் ஹொசைன் அமீர் அப்துல்லாஹியன், கிழக்கு அஜர்பைஜான் மாகாண ஆளுநர் மாலேக் ரஹ்மதி உள்ளிட்ட விமானத்தில் பயணித்த அனைவரும் உயிரிழந்தனர். இந்நிலையில், 17 மணி நேர […]

You May Like