fbpx

பெங்களூரு ஐ.டி.நிறுவனங்கள் படகு வாங்க திட்டம்…இனி படகு அத்தியாவசியமாகிவிடுமோ?

பெங்களூருவில் பல பகுதிகள் வெள்ளம் சூழ்ந்துள்ளதால் ஐ.டி.நிறுவனங்கள் அவசர தேவைக்காக படகுகளை வாங்க திட்டமிட்டுள்ளது.

பெங்களூருவில் கடந்த சில நாட்களாக பெய்துவரும் அதிக கனமழையால் ஒயிட் பீல்ட், மடிவாலா , எலக்ட்ரானிக் சிட்டி போன்ற ஐ.டி.நிறுவனங்கள் உள்ள பகுதியில் சாலையில் வெள்ளம் பெருக்கெடுத்தது.

அலுவலகங்கள் குடியிருப்பு பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்தது. லட்சக்கணக்கான கார்கள் , பைக்குகள் நீரில் முழுமையாக மூழ்கின. வீடுகளுக்கு மழை நீர் தேங்கிக் கிடந்ததால் பொதுமக்கள் பெரிதும் அவதிக்குள்ளாக நேரிட்டது. அதே நேரத்தில் சாக்கடை நீர் வெள்ள நீருடன் கலந்து வீடுகளுக்குள் புகுந்ததால் துர்நாற்றம் வீசியது. இதனால் பொதுமக்கள் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது. சில பகுதிகளில் ஆற்றைக்கடக்க போக்குவரத்துரத்து செய்யப்பட்ட நிலையில் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவர்கள் ஜே.சி.பி. மற்றும் டிராக்டரில் சென்று வந்தனர். இதுவரை பெங்களூருவில் இது போன்ற சூழ்நிலை வந்தது கிடையாது . இதுவே முதல்முறையாக இப்படி அவதிக்குள்ளாக நேரிடுவது  என பொதுமக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். கோடிக்கணக்கில் முதலீடு செய்து வாங்கிய வீடுகளை விட்டு பொதுமக்கள் வெளியேறத் தயாராகிவிட்டனர்.  அந்த அளவிற்கு மழையின் தாக்கம் இருந்தது.  இந்நிலையில் தற்காலிகமாக இதை சமாளிக்க படகுகளை வாங்க பெங்களூரு ஐ.டி.நிறுவனங்கள் திட்டமிட்டுள்ளன.

பெங்களூருவின் அவுட்டர் ரிங் சாலையில் உள்ள அமெரிக்க நிதி நிறுவனம் ஒன்று ஏற்கனவே ரப்பர் படகுகளை வாங்கியுள்ளது. அந்த நிறுவனம் தங்கள்அலுவலக ஊழியர்களை வெள்ளத்தில் இருந்து மீட்டு பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றது. அவசரகாலத் தேவைக்காக ஐ.டி.நிறுவனங்கள் படகுகளை வாங்க உள்ளது. சமீப காலத்தில் இது போன்ற சூழ்நிலைகளை கையாளுவதற்காக சொந்தமாக படகுகளை வாங்குவது ட்ரெண்டிங்கில் உள்ளது. ஊழியர்களையும் , அவர்களின் குடும்பத்தையும் இயற்றை பேரிடர்களில் இருந்து காப்பாற்றுவதற்காகவும் இந்த படகுகள் பயன்படும். அவுட்டர் ரிங் சாலையில் வர்த்தக பூங்காக்கள் அதிக அளவில் அமைந்துள்ளது. செஸ்னா வர்த்தக பூங்கா , எம்பசி டெக் பூங்கா, ஆர்.எம்.இசட் . பிரஸ்டிஜ் , இந்த நிறுவனங்கள் மூலம் பத்து லட்சம் பேர் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வெள்ள பாதிப்பால் ரூ.225 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது என்று நிறுவனங்கள் ஏற்கனவே தகவல் வெளியிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.  

Next Post

குழந்தையின் அழுகையை நிறுத்த தாய் செய்யும் காரியமா இது..! திடுக்கிடும் சம்பவம்..!

Thu Sep 8 , 2022
குழந்தையின் அழுகையை நிறுத்த அதன் மீது பெற்ற தாயே மண்ணெண்ணெய் ஊற்றி எரிக்க முயன்ற சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பஞ்சாப் மாநிலம் லூதியானாவைச் சேர்ந்த ரூபிந்தர் கவுர் என்ற பெண், கணவரைப் பிரிந்து சுடானி கலான் கிராமத்தில் உள்ள தனது தாய் வீட்டில் 3 குழந்தைகளுடன் வசித்து வருகிறார். இந்நிலையில், அவரது 3 வயது மகன் ஹர்மன் நள்ளிரவில் தூங்காமல் அழுது கொண்டே இருந்ததால், ரூபிந்தர் கவுர் ஆத்திரமடைந்துள்ளார். ஒருகட்டத்தில் […]

You May Like