fbpx

வங்கதேச அட்டூழியம்!. இந்து பெண்ணை கடத்தி செல்லும் முஸ்லீம்கள்!. வைரலாகும் வீடியோவால் அதிர்ச்சி!

Bangladesh: வங்கதேச வன்முறையின் உச்சமாக ஒரு இந்து பெண்ணை முஸ்லீம்கள் கடத்திச்செல்லும் வீடியோ காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாகிவருகிறது.

எதிர்க்கட்சிகள் புறக்கணிப்பு, தேர்தல் முறைகேடு என பல சர்ச்சைகளுக்கு இடையே கடந்த ஜனவரி மாதம் 4-வது முறையாக வங்கதேசத்தின் பிரதமராக பதவியேற்றார் ஷேக் ஹசீனா. 5 மாதங்கள் கடந்த பின்னர், குடிமைப் பணிகளில், சுதந்திர போராட்ட வீரர்களின் வாரிசுகளுக்கு மீண்டும் 30 சதவிகித இடஒதுக்கீடு வழங்க டாக்கா நீதிமன்றம் அனுமதி அளித்தது.

நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து 6 பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்கள் அமைதி போராட்டத்தை அறிவித்தனர். மாணவர் போராட்டத்திற்கு ஷேக் ஹசீனா அனுமதி வழங்காத நிலையிலும், நாடு முழுவதும் போராட்டம் வேகமெடுத்தது. போராட்டத்தை ஒடுக்க நினைத்த காவல்துறையினருக்கும் மாணவர்களுக்கும் இடையே ஆங்காங்கே மோதல் ஏற்பட்டது.

தங்கள் கோரிக்கைக்கு அரசு செவி சாய்க்காததால், மாணவர்கள் ரயில் மற்றும் சாலை மறியலில் ஈடுப்பட்டனர். இதனால் டாக்கா உள்ளிட்ட முக்கிய நகரங்களில் போக்குவரத்து முடங்கியது. போராட்டக்காரர்களை அழைத்துப் பேசாமல், அவர்களை பயங்கரவாதிகள் என அழைத்தார் ஷேக் ஹசீனா. மேலும் பயங்கரவாதிகள் ஒடுக்கப்படுவார்கள் என எச்சரிக்கையும் விடுத்தார். நாடு முழுவதும் வன்முறையும் கலவரமும் தீவிரமடைய, டாக்கா பல்கலைக்கழக வளாகத்திற்குள் நுழைந்து தாக்குதல் நடத்தியது காவல்துறை. இதில் ஏராளமானவர்கள் பலியாகினர்.

இந்தநிலையில், சல்வான் மோமிகா என்பவரின் எக்ஸ் தளத்தில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோவில், நோகாலியில் பகுதியில், முஸ்லிம்கள் குழுவொன்று பெண் ஒருவரை வலுக்கட்டாயமாக தூக்கிக்கொண்டு வாகனத்தில் ஏற்றும் காட்சிகள் காணொளியில் இடம்பெற்றுள்ளது. இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பரவலாக பரவி, கடும் கண்டனங்களையும், எதிர்ப்பையும் கிளப்பியுள்ளது.

1947 பிரிவினையில் இருந்து இப்போது வரை, வங்கதேசத்தில் இதுபோன்ற சம்பவங்கள் நடந்துள்ளன. உலகெங்கிலும் உள்ள இந்துக்கள் செயலற்ற நிலையில் இருக்கும் வரை இதுபோன்ற சம்பவங்கள் நடந்து கொண்டே இருக்கும்.

Readmore: கதுவா தாக்குதல்!. பயங்கரவாதிகளின் வரைபடங்கள் வெளியீடு!. தகவல் கொடுப்பவர்களுக்கு ரூ.20 லட்சம்!

English Summary

Muslim mob in Bangladesh abducts Hindu woman, video goes viral

Kokila

Next Post

2026 தேர்தல்.. விஜய் அரசியலுக்கு வருவதை கண்டு எனக்கு பயம் இல்லை...! அண்ணாமலை கருத்து

Sun Aug 11 , 2024
I have no fear of Vijay entering politics

You May Like