fbpx

வங்கதேச உச்சநீதிமன்ற நீதிபதி கைது!. நாட்டை விட்டு தப்பிச் செல்ல முயன்றதாக எல்லையில் நிறுத்திவைப்பு!

Bangladesh: நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்றதாக வங்க தேச உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார்.

இந்தியாவின் அண்டை நாடுகளில் ஒன்றான வங்கதேசத்தில் 30 சதவீத இடஒதுக்கீ்ட்டிற்கு எதிராக போராட்டம் வெடித்தது. மாணவர்கள் நடத்திய போராட்டத்தில் வன்முறை ஏற்பட்டது. இதில் 400-க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டனர். இதனையடுத்து ஏற்பட்ட நெருக்கடியால், பிரதமர் பதவியில் இருந்து ஷேக் ஹசீனா ராஜினாமா செய்தார். அதே நாளில், நாட்டை விட்டு வெளியேறிய ஷேக் ஹசீனா, இந்தியாவில் தஞ்சம் அடைந்துள்ளார். இதையடுத்து, வங்கதேசத்தில் முகமது யூனுஷ் தலைமையில் இடைக்கால அரசு அமைத்துள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் வீரர் ஷகிப் அல் ஹசனுக்கு எதிராக கொலை வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர் மீது வங்கதேசத்தில் உள்ள டாக்காவின் அடபோர் காவல் நிலையத்தில் கொலை வழக்கு பதியப்பட்டுள்ளது. கொலை வழக்கில் முதல் தகவல் அறிக்கையில் அவரது பெயர் சேர்க்கப்பட்டு இருக்கிறது. இதையடுத்து அவர் எப்போது வங்கதேசதிற்கு திரும்பினாலும் கைது செய்யப்படலாம் என கூறப்படுகிறது. முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனா தலைமையிலான அவாமி லீக் ஆட்சியில் எம்.பி-யாக ஷகிப் அல் ஹசன் இருந்தார். ஷாகிப்பைத் தவிர, பிரதமர் ஷேக் ஹசீனா, ரஃபிகுல் இஸ்லாம் மற்றும் கட்சியைச் சேர்ந்த பல முன்னாள் அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்கள் மீதும் கொலைக் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.

முன்னாள் சட்ட அமைச்சர் அனிசுல் ஹக் மற்றும் தனியார் துறை விவகாரங்களுக்கான முன்னாள் பிரதமரின் ஆலோசகர் சல்மான் எஃப் ரஹ்மான் ஆகியோர் படகு மூலம் டாக்காவை விட்டு வெளியேற முயன்றபோது முதலில் கைது செய்யப்பட்டனர். கைது செய்யப்பட்டவர்களில் முன்னாள் அமைச்சர்கள், சட்டமியற்றுபவர்கள், கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள் மற்றும் சமீபத்தில் பதவி நீக்கம் செய்யப்பட்ட இராணுவ மற்றும் சிவில் அதிகாரிகளும் அடங்குவர். கைது செய்யப்பட்ட குறிப்பிடத்தக்க நபர்களில் முன்னாள் வெளியுறவு அமைச்சர் ஹசன் மஹ்மூத், முன்னாள் சமூக நலத்துறை அமைச்சர் திபு மோனி, இடதுசாரி தொழிலாளர் கட்சியின் தலைவர் ரஷீத் கான் மேனன் மற்றும் பல உயர் இராணுவ அதிகாரிகள் அடங்குவர்.

இந்தநிலையில், நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயன்றதாக வங்க தேச உச்ச நீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஷம்சுதீன் சௌத்ரி மாணிக், எல்லை பாதுகாப்புப் படையினரால் கைது செய்யப்பட்டார். மேலும் மாணிக் இந்தியாவுக்கு தப்பிச்செல்ல முயன்றபோது சில்ஹெட்டின் கனைகாட் எல்லையில் தடுத்து நிறுத்தப்பட்டதாக BGB வெள்ளிக்கிழமை தெரிவித்தது.

Readmore: கொல்கத்தா பலாத்கார குற்றவாளிக்கு ‘விலங்கு போன்ற உள்ளுணர்வு’!. ஆபாசத்திற்கு அடிமையானவர்!. உளவியல் சோதனை!

English Summary

Bangladesh Supreme Court Judge Detained by Border Guard While Allegedly Fleeing to India

Kokila

Next Post

உஜ்வாலா யோஜனா திட்டம்!. அதிக விலைக்கு கேஸ் சிலிண்டர்கள் வழங்கப்படுகிறதா?. புகார் எண்கள் அறிவிப்பு!

Sat Aug 24 , 2024
Ujjwala Yojana: If you are also being given expensive gas cylinders in this scheme, then complain here

You May Like