இந்திய ரிசர்வ் வங்கி, புதிய விதிமுறைகளை அமல்படுத்தியுள்ளது. இது வங்கிக் கணக்கு மற்றும் லாக்கருக்கு ஒரு நாமினியை உருவாக்கும் செயல்முறையை எளிதாக்குகிறது. இனி உங்கள் வங்கிக் கணக்கில் 4 பேரை நாமினியாக நியமிக்கலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நான்கு பேரும் முன்கூட்டியே தீர்மானிக்கப்பட்ட பங்கில் பணத்தைப் பெறுகிறார்கள். உதாரணமாக, A என்பவருக்கு 40% கிடைக்கும் என்று நீங்கள் முடிவு செய்தால், B க்கு 30%, C க்கு 20%, D க்கு 10% கிடைக்கும். உங்கள் மரணத்திற்குப் பிறகு, அவர்கள் அதற்கேற்ப பணத்தைப் பெறுவார்கள்.
இதில், முதல் நபருக்கு மட்டுமே பணம் கிடைக்கும். அவர் இல்லையென்றால் அல்லது பணத்தை எடுக்க மறுத்தால், 2-வது நபருக்கு உரிமை உண்டு. பின்னர் மூன்றாவது நபருக்கும், 4-வது நபருக்கும் உரிமை உண்டு. வங்கி லாக்கர் அல்லது வங்கியின் பாதுகாப்பில் நீங்கள் வைத்திருக்கும் பொருட்களுக்கு, ஒரு நியமனம் மட்டுமே செல்லுபடியாகும்.
இதிலும் 4 பேரை நியமனம் செய்ய முடியும். எந்த நியமனமும் செய்யவில்லை என்றால், உங்களுக்குப் பிறகு ஒரு உரிமைகோருபவர் இருந்தால், அவர்கள் உயில், வாரிசு உரிமை சான்றிதழ் போன்ற ஆவணங்களை வழங்க வேண்டும். இந்த வேலை நீண்டதாகவும், அலைச்சலாகவும் இருக்க வாய்ப்புள்ளது. நீங்கள் வங்கியில் சிறிது பணத்தை டெபாசிட் செய்திருந்தால், அது 10 ஆண்டுகளாக எந்த பரிவர்த்தனையும் செய்யப்படாமல் இருந்தால், RBI இன் DEA நிதிக்குச் செல்லும். ஆனால், இந்தப் பணத்தை உங்கள் வங்கியில் இருந்து எப்போது வேண்டுமானாலும் எடுத்துக் கொள்ளலாம்.
நீங்கள் ஒரு நிறுவனத்தின் பத்திரத்தில் பணத்தை முதலீடு செய்து 7 ஆண்டுகளாக அதை எடுக்கவில்லை என்றால், அதன் மீதான வட்டியும் IEPF நிதிக்குச் சென்றுவிடும். 7 ஆண்டுகளுக்கு ஏதேனும் ஈவுத்தொகை எடுக்கப்படாவிட்டால், அதுவும் IEPF-க்குச் சென்றுவிடும். எனவே, உங்கள் இறப்புக்குப் பிறகு உங்கள் அன்புக்குரியவர்கள் எந்தப் பிரச்சனையையும் சந்திக்காமல் இருக்க, உங்கள் வங்கிக் கணக்கு மற்றும் லாக்கருக்கு இப்போதே நானிகளை நியமிப்பது நல்லது.