fbpx

இனி வங்கி ஊழியர்களுக்கு, வாரத்தில் 2 நாட்கள் விடுமுறை.. விரைவில் வெளியாக உள்ள குட்நியூஸ்..

வங்கி ஊழியர்களுக்கு விரைவில் 2 நாட்கள் வார விடுமுறை கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. வங்கி தொழிற்சங்கங்களின் கோரிக்கையை இந்திய வங்கிகள் சங்கம் (ஐபிஏ) பரிசீலித்து வருவதாகக் கூறப்படுவதால், வங்கி ஊழியர்களுக்கு விரைவில் நற்செய்தி வெளியாகும் என்று கூறப்படுகிறது.. அதாவது வாரத்தில் 5 நாட்கள் செய்தால் போதும்.. 2 நாட்கள் விடுமுறை கிடைக்கும்.. எனினும் 5 வேலை நாட்களில், தினமும் 50 நிமிடங்கள் கூடுதல் வேலை நேரமாக அதிகரிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது..

இதுகுறித்து இந்திய வங்கிகள் சங்கம் மற்றும் வங்கி ஊழியர்களின் ஒருங்கிணைந்த மன்றம் இடையே பேச்சுவார்த்தை நடந்து வருகிறது.. 2 நாட்கள் விடுமுறை அளிக்க இந்திய வங்கிகள் சங்கம் பரிசீலித்து வருவதாகவும், இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. அகில இந்திய வங்கி அதிகாரிகள் சங்கத்தின் பொதுச் செயலாளர் எஸ்.நாகராஜன் இதுகுறித்து பேசிய போது, அனைத்து சனிக்கிழமைகளையும் விடுமுறை தினங்களாக அரசாங்கம் அறிவிக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளார்..

இதனிடையே மார்ச் மாதத்தில் இரண்டாவது மற்றும் நான்காவது சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகள் உட்பட 12 நாட்கள் வங்கிகள் மூடப்பட்டிருக்கும் என்பதை வங்கி ஊழியர்களும் வங்கி வாடிக்கையாளர்களும் அறிந்து கொள்ள வேண்டும். நாடு முழுவதும் சில வங்கி விடுமுறைகள் கடைபிடிக்கப்படும் அதே வேளையில், சில உள்ளூர் விடுமுறைகளாக இருக்கும்.

அனைத்து வங்கிகளும் பொது விடுமுறை நாட்களில் மூடப்பட்டிருக்கும், சில வங்கிகள் பிராந்திய திருவிழாக்கள் மற்றும் விடுமுறை நாட்களைக் கடைப்பிடிக்கின்றன. இருப்பினும், வங்கி விடுமுறைகள் ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப மாறுபடும்.. இந்த விடுமுறைகள் குறிப்பிட்ட மாநிலங்களில் கொண்டாடப்படும் பண்டிகைகள் அல்லது அந்த மாநிலங்களில் குறிப்பிட்ட சூழ்நிலைகளை பொறுத்து அறிவிக்கப்படுகிறது.

Maha

Next Post

Paytm மூலம் இனி பேருந்து டிக்கெட் முன்பதிவு செய்யலாம்.. ஆனால் இந்த நகரங்களில் மட்டும் தான்..

Thu Mar 2 , 2023
இந்தியாவின் முன்னணி டிஜிட்டல் பேமெண்ட் நிறுவனமான Paytm நிறுவனம், ஆன்லைன் பேருந்து டிக்கெட் முன்பதிவுக்காக மேற்கு வங்க போக்குவரத்து கழகம் (WBTCL) உடன் இணைந்து செயல்பட உள்ளதாக அறிவித்துள்ளது. பேருந்து டிக்கெட் முன்பதிவு வசதிக்காக Paytm நிறுவனம், மேற்குவங்க அரசுக்கு சொந்தமான போக்குவரத்து நிறுவனத்துடன் இணைந்து செயல்பட உள்ளது. மேற்குவங்கத்தில், 40 வழிதடங்களில், அரசு போக்குவரத்து கழகத்தால் இயக்கப்படும் ஏசி மற்றும் ஏசி அல்லாத பேருந்துகளில் ஆன்லைன் டிக்கெட்டுகளை முன்பதிவு […]

You May Like