fbpx

அடுத்த வாரம் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை.. முழு விவரம் இதோ..

அடுத்த வாரத்தில் மட்டும் 6 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..

ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் அடுத்த வாரத்தில் மட்டும் 6 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த வாரம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அடுத்த வாரம் வர உள்ள விடுமுறை நாட்கள் :

  • ஆகஸ்ட் 7: ஞாயிறு
  • ஆகஸ்ட் 9 (செவ்வாய்): மொஹரம்
  • ஆகஸ்ட் 11 : ரக்‌ஷ பந்தன் (அகமதாபாத், போபால், டேராடூன், ஜெய்ப்பூர் மற்றும் சிம்லா)
  • ஆகஸ்ட் 12 : ரக்ஷ பந்தன் (கான்பூர் மற்றும் லக்னோ)
  • ஆகஸ்ட் 13: இரண்டாவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 14: ஞாயிறு

ஆகஸ்ட் மாதத்தில் மீதமுள்ள வங்கி விடுமுறை நாட்கள் :

  • ஆகஸ்ட் 15 (திங்கட்கிழமை): சுதந்திர தினம்
  • ஆகஸ்ட் 16: பார்சி புத்தாண்டு (ஷாஹேன்ஷாஹி) – பேலாபூர், மும்பை மற்றும் நாக்பூர்
  • ஆகஸ்ட் 18: ஜன்மாஷ்டமி – புவனேஸ்வர், டேராடூன், கான்பூர் மற்றும் லக்னோ
  • ஆகஸ்ட் 19 (வெள்ளிக்கிழமை): கிருஷ்ண ஜெயந்தி (அகமதாபாத், போபால், சண்டிகர், சென்னை, காங்டாக், ஜெய்ப்பூர், ஜம்மு, பாட்னா, ராய்ப்பூர், ராஞ்சி, ஷில்லாங் மற்றும் சிம்லா)
  • ஆகஸ்ட் 21: ஞாயிறு
  • ஆகஸ்ட் 27: நான்காவது சனிக்கிழமை
  • ஆகஸ்ட் 28: ஞாயிறு
  • ஆகஸ்ட் 20: ஸ்ரீ கிருஷ்ண அஷ்டமி – ஹைதராபாத்
  • ஆகஸ்ட் 29: ஸ்ரீமந்த சங்கரதேவரின் திதி – கவுகாத்தி
  • ஆகஸ்ட் 31: சம்வத்சரி (சதுர்த்தி பக்ஷா)/கணேஷ் சதுர்த்தி/ வரசித்தி விநாயக விரதம்/ விநாயகர் சதுர்த்தி — அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, புவனேஸ்வர், சென்னை, ஹைதராபாத், மும்பை, நாக்பூர் மற்றும் பனாஜி

ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.

Maha

Next Post

மூதாட்டியிடம் முத்தம் கேட்டு சண்டையிட்ட வாலிபர்... ஆஸ்பத்திரியில் அட்மிட் ஆன பாட்டி..!

Sat Aug 6 , 2022
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகில் இருக்கும் மோரூர் பகுதியில் வசித்து வருபவர் மாதையன். இவர் கூலித்தொழில் செய்து வருகிறார். இந்நிலையில் நேற்று முன்தினம் குடித்துவிட்டு வந்து போதையில், அதே பகுதியில் உள்ள சாந்தா என்ற பாட்டியிடம் முத்தம் கேட்டுள்ளார். இதனால் அதிர்ச்சி அடைந்த பாட்டி, மாதையனிடம் சண்டை போட்டுள்ளார்.பாட்டி முத்தம் கொடுக்காததால் மதுபோதையில் இருந்த மாதையன் அருகே கிடந்த இரும்புக் கம்பியை எடுத்து பாட்டியை சரமாரியாக அடித்துள்ளார். இதனால் பாட்டி […]

You May Like