ராஜஸ்தான் மாநிலம் ஜெய்பூரை சேர்ந்த மூத்த வங்கி அதிகாரி ஒருவரின் மகன் அனுமன் மீனா (31) தனியார் நிறுவனம் ஒன்றில் இவர் பணியாற்றி வந்தார். சென்ற திங்கள் கிழமை காலை அலுவலகம் சென்றவர் அங்கிருந்து காணாமல் போனார். இது தொடர்பாக அவருடைய குடும்பத்தினர் நகர காவல் நிலையத்தில் புகார் வழங்கினர்.
அதற்கு அடுத்த நாள் ஹனுமன் மீனாவின் தந்தைக்கு ஒரு வீடியோ தகவல் வந்தது. அதில் ஹனுமான் மீனா தங்களுடைய பிடியில் இருப்பதாகவும் ஒரு கோடி ரூபாய் கொடுக்காவிட்டால் அவர் கொல்லப்படுவார் என்றும் மிரட்டல்விடுக்கப்பட்டு இருந்தது.
இது தொடர்பாக தீவிர விசாரணை நடத்திய ஜெய்பூர் காவல்துறையினர் ஹனுமன் மீனாவை கடத்திச் சென்ற திவாகர்டாங்க் (34), பிரிட்ஜ் பன்சிங் சவுகான் (27), அவருடைய சகோதரர்கள் யோகேந்திர சிங் சவுகான் (25 )உள்ளிட்ட மூவரை நேற்று முன்தினம் கைது செய்தனர் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின்படி அனுமன் மீனாவின் உடலை ஆற்றில் இருந்து காவல்துறையினர் மீட்டெடுத்தனர்.
ஹனுமான் மீனாவை கடத்திச் சென்ற மூன்று பேரும் அவருடைய நண்பர்கள் ஒரு மாதத்திற்கு முன்னரே இந்த கடத்தலை திட்டமிட்டு சங்கனேரில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்துள்ளனர். பணம் கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிந்தவுடன் கடத்திய அன்றே ஹனுமன் மீனாவை கொலை செய்திருக்கிறார்கள்.
ஆனால் இவர்களில் முக்கிய குற்றவாளியான திவாக் டாங்க் ஒரு வழக்கறிஞர். இவர் கடத்தப்பட்டவர் தேடப்படும் போது அவருடைய வீட்டிற்கு சென்று தன்னுடைய கவலையை கூறியுள்ளார் அதோடு சங்கனேர் காவல் நிலையத்திற்கு சென்று தன்னுடைய நண்பனை விரைவாக கண்டுபிடிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண்டு நாடகமாடி இருக்கிறார். ஆனாலும் இந்த சதி செயலில் அவருக்கும் தொடர்பு இருக்கிறது என்பதை தொழில்நுட்ப ஆதாரங்கள் வெளிப்படுத்தி விட்டனர் என்று காவல்துறையினர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.