செப்டம்பர் மாதம் இன்று தொடங்கியது. இந்த மாதத்தில் மட்டும் இந்தியாவில் உள்ள வங்கிகள் மொத்தம் 15 நாட்களுக்கு மூடப்பட்டிருக்கும். இதில் தேசிய மற்றும் பிராந்திய விடுமுறைகள் மற்றும் ஞாயிறு, இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளும் அடங்கும்.
இந்தியாவில் வங்கி விடுமுறை நாட்கள் மாநிலத்திற்கு மாநிலம் வேறுபடுகின்றன. இதற்கு முக்கியமான காரணம் ஒவ்வொரு மாநிலத்திற்குத் தனிப்பட்ட விழாக்கள், பாரம்பரியம், கலாச்சாரம் இருக்கும் காரணத்தால் பிராந்திய அடிப்படையில் இந்த விடுமுறை மாறுகிறது. இதனால் செப்டம்பர் மாதம் உங்களுக்கு ஏதேனும் முக்கியமான வங்கி பணிகள் இருக்கும் பட்சத்தில் முன்கூட்டியே உள்ளூர் வங்கி விடுமுறை நாட்களை தெரிந்துகொண்டு வங்கி பணிகளைத் திட்டமிட்டுக்கொள்வது சிறந்தது.
செப்டம்பர் 2024 இல் குறைந்தது 15 பட்டியலிடப்பட்ட விடுமுறை நாட்கள் உள்ளன. குறிப்பாக, சில நீண்ட வார இறுதி விடுமுறைகளும் உள்ளன, எனவே நீங்கள் வங்கி பணிகளுக்கான செல்லும் போது முன்கூட்டியே திட்டமிட்டுக்கொள்ளுங்கள். செப்டம்பர் மாதம் எந்தெந்த நாட்களில் வங்கிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது, முழு பட்டியலை இங்கே பார்க்கலாம்:
செப்டம்பர் மாதம் – வங்கி விடுமுறைகள்
செப்டம்பர் 4 (ஸ்ரீஸ்ரீ மத்பதேவரின் திருப்பாவ் திதி)
கவுகாத்தி
செப்டம்பர் 7 (விநாயகர் சதுர்த்தி)
அகமதாபாத், பேலாபூர், பெங்களூரு, ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, புவனேஸ்வர், சென்னை, மும்பை, நாக்பூர், பனாஜி
செப்டம்பர் 14 (ஓணம்)
கொச்சி, ராஞ்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 16 (பரவாஃபத் அல்லது மிலாத் உன் நபி)
அகமதாபாத், ஐஸ்வால், பேலாபூர், பெங்களூரு, சென்னை, டேராடூன், ஆந்திரப் பிரதேசம், தெலுங்கானா, இம்பால், ஜம்மு, கான்பூர், கொச்சி, லக்னோ, மும்பை, நாக்பூர்
புது டெல்லி, ராஞ்சி, ஸ்ரீநகர், திருவனந்தபுரம்
செப்டம்பர் 17 (மிலாத் உன் நபி)
காங்டாக், ராய்பூர்
செப்டம்பர் 18 (பாங் லப்சோல்)
காங்டாக்
செப்டம்பர் 20 (ஈத் இ மிலாத்)
ஜம்மு. ஸ்ரீநகர்
செப்டம்பர் 21 (ஸ்ரீ நாராயண குரு சமாதி திவாஸ்)
கொச்சி, திருவனந்தபுரம்
செப்டம்பர் 23 (மகாராஜா ஹரி சிங் பிறந்தநாள்)
ஜம்மு, ஸ்ரீநகர்
சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் வங்கிகளுக்கு விடுமுறை
செப்டம்பர் 14 (இரண்டாவது, செப்டம்பர் 28 (நான்காம்)
ஞாயிறு
செப்டம்பர் 1, செப்டம்பர் 8, செப்டம்பர் 15, செப்டம்பர் 22, செப்டம்பர் 29.
Read more ; விடாது கொட்டும் கனமழை.. வெள்ளத்தில் தத்தளிக்கும் குஜராத்..!! பலி எண்ணிக்கை 47 ஆக உயர்வு!!