செப்டம்பர் மாதத்திற்கான வங்கி விடுமுறை குறித்த அறிவிப்பை ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ளது..
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். அந்த வகையில் செப்டம்பர் மாதத்தில் 13 விடுமுறை நாட்கள் உள்ளன.. இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது.
ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இந்தியாவில் உள்ள வங்கிகள் மாதத்தின் முதல் மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் இயங்கி வருகின்றன, அதே நேரத்தில் இரண்டாவது மற்றும் மூன்றாவது சனிக்கிழமைகள் விடுமுறை நாட்களாகக் கருதப்படுகின்றன. அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளும் விடுமுறையாகக் கருதப்படுகிறது.
செப்டம்பர் மாதத்தின் வங்கி விடுமுறை நாட்கள் :
- செப்டம்பர் 4: மாதத்தின் முதல் ஞாயிறு.
- செப்டம்பர் 6: கர்மா பூஜையைக் கொண்டாடும் வகையில் (ராஞ்சி முழுவதும் வங்கிகள் மூடப்படும்)
- செப்டம்பர் 7: முதல் ஓணம் பண்டிகையை முன்னிட்டு, கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 8: ஓணம் பண்டிகை கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள்மூடப்படும்.
- செப்டம்பர் 9: இந்திரஜாத்ரா கொண்டாடப்படுவதால் காங்டாக்கில் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 10: கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் உள்ள வங்கிகள் ஸ்ரீ நாராயண குரு ஜெயந்தியை முன்னிட்டு வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
- செப்டம்பர் 11: மாதத்தின் இரண்டாவது ஞாயிறு.
- செப்டம்பர் 18: மாதத்தின் மூன்றாவது ஞாயிறு.
- செப்டம்பர் 21: ஸ்ரீ நாராயண குரு சமாதி தினத்தை முன்னிட்டு கொச்சி மற்றும் திருவனந்தபுரத்தில் வங்கிகள் மூடப்படும்.
- செப்டம்பர் 24: மாதத்தின் நான்காவது சனிக்கிழமை.
- செப்டம்பர் 25: மாதத்தின் 4வது ஞாயிறு.
- செப்டம்பர் 26: மேரா சௌரன் ஹௌபாவை முன்னிட்டு இம்பால் மற்றும் ஜெய்ப்பூர் வங்கிகள் மூடப்பட்டிருக்கும்.
ரிசர்வ் வங்கியால் அறிவிக்கப்பட்ட வங்கி விடுமுறை நாட்களில் அனைத்து பொதுத்துறை மற்றும் தனியார் துறை வங்கிகள், வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகளின் கிளைகள் மூடப்பட்டிருக்கும்.