fbpx

அதிமுக பொதுக்குழுவுக்கு தடையா..? சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணை..!

அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது.

அதிமுகவில் ஒற்றை தலைமை விவகாரம் வெடித்துள்ள நிலையில், சென்னை வானகரம் ஸ்ரீவாரு மண்டபத்தில் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஜூன் 23ஆம் தேதி சலசலப்புடன் நடைபெற்றது. இதற்கிடையே, 23 தீர்மானங்களை தவிர மற்ற எந்த தீர்மானங்களும் நிறைவேற்றக் கூடாது என ஐகோர்ட்டு உத்தரவிட்டிருந்தது. ஆனால், ஓபிஎஸ் ஒப்புதல் தந்த 23 தீர்மானங்களையும் பொதுக்குழு நிராகரிப்பதாக முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகம் ஆவேசமாக மேடையில் அறிவித்தார். அதன் பின்னர், அதிமுக அவைத் தலைவராக தமிழ்மகன் உசேன் தேர்வு செய்யப்படுவதாக எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.

சட்டத்திற்குப் புறம்பான தீர்மானத்தை எதிர்த்து வெளிநடப்பு செய்கிறோம்: அதிமுக  பொதுக்குழு மேடையில் வைத்திங்கம் ஆவேசம் | admk meet updates - hindutamil.in

இந்நிலையில், அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரிய பொதுக்குழு உறுப்பினர் சண்முகம் தொடர்ந்த வழக்கு, சென்னை உயர்நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வருகிறது. ஐகோர்ட் உத்தரவை மீறி அவைத் தலைவர் தேர்வு செய்யப்பட்டதாகவும், எதிர்க்கட்சி தலைவர் ஈபிஎஸ், முன்னாள் அமைச்சர்கள் சி.வி. சண்முகம், ஜெயக்குமார், திண்டுக்கல் சீனிவாசன் ஆகியோர் உத்தரவை மீறியதாகவும் உறுப்பினர் சண்முகம் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்திருந்தார். குறிப்பாக, மேல்முறையீட்டு மனுவில் தாக்கல் செய்யப்பட்ட 3 கூடுதல் மனுக்களை ஐகோர்ட்டு இன்று விசாரிக்கிறது.

General body meeting in a tense environment: AIADMK general body, executive  committee members visit | #லைவ் அப்டேட்ஸ்: பதற்றம்... கோஷம்... பாதியில்  வெளியேற்றம்...? அ.தி.மு.க பொதுக்குழு ...

இந்த பரபரப்பான நிலையில், அதிமுகவின் அடுத்த பொதுக்குழு கூட்டம் ஜூலை 11ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனை முன்னிட்டு, பொதுக்குழு ஏற்பாடுகள் மிகத் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. ஆனால், இரட்டை தலைமை விவகாரம் சர்ச்சையில் உள்ள நிலையில், அடுத்த நிலையில் இருக்கும் பொருளாளருக்கு தான் சின்னமும், கட்சியை வழி நடத்தும் அதிகாரமும் உள்ளது என்றும், பொருளாளரான ஓபிஎஸ் அவர்களின் ஒப்புதலின்றி பொதுக்குழுவை கூட்டினால் அது செல்லாது என்றும், குறிப்பாக அழைப்பிதழ் அனுப்பி அனைத்து ஏற்பாடுகள் செய்தாலும் ஜூலை 11ஆம் தேதி பொதுக்குழு நடக்க வாய்ப்பே இல்லை என்றும் ஓபிஎஸ் ஆதரவாளர் வைத்திலிங்கம் தெரிவித்திருந்தார். எனினும், இந்த பொதுக்குழுவில் அதிமுகவில் பொதுச்செயலாளர் பதவி உருவாக்கப்பட்டு எடப்பாடி பழனிசாமி அவர்களை நியமனம் செய்யும் தீர்மானம் நிறைவேற்றப்படும் என முன்னாள் அமைச்சர் நத்தம் விஸ்வநாதன் தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Chella

Next Post

கொரோனா 4-வது அலை..? நேற்று ஒரே நாளில் 16,135 பேருக்கு தொற்று உறுதி..

Mon Jul 4 , 2022
இந்தியாவில் கடந்த 24 மணி நேரத்தில் மேலும் 16,135 பேருக்கு கொரோனா பாதிப்பு உறுதியாகி உள்ளது… நாட்டில் கடந்த 3 மாதங்களாக குறைந்திருந்த கொரோனா பாதிப்பு தற்போது மீண்டும் அதிகரிக்க தொடங்கி உள்ளது.. குறிப்பாக டெல்லி, உத்தரப்பிரதேசம், மகாராஷ்டிரா, தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா உள்ளிட்ட மாநிலங்களில் தொற்று வேகமாக பரவி வருகிறது.. இந்த சூழலில், அதிகரித்து வரும் வைரஸை கட்டுப்படுத்தும் நோக்கத்துடன், ரயில் நிலையங்கள், பேருந்து நிலையங்கள், விமான நிலையம் […]

You May Like