நமது சமுதாயத்தை பொறுத்தவரை சலூன் கடை வைத்திருப்பவர் என்றால், மிகவும் ஏழ்மையானவர் என்று பலர் நினைப்பதுண்டு. சிலர் அவர்களை ஏளனமாய் பார்ப்பதும் உண்டு. சலூன் கடையில் என்ன வருமானம் வந்து விட போகுது என்று பேசுபவர்களின் வாய் அடைக்க செய்துள்ளது இந்த சலூன் கடைக்காரரிடம் இருக்கும் கார்கள் மற்றும் அதன் எண்ணிக்கை. ஆம், பிரபல தொழிலதிபர்களிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கையை விட இவரிடம் இருக்கும் கார்களின் எண்ணிக்கை அதிகம்..
ரமேஷ் பாபு, சிறிய சலூன் கடையை வைத்து வாழ்கையில் எந்தச் சிக்கலும் இல்லாமல் வாழ்ந்து வந்தார். ஆனால் அவரது தந்தையின் மரணத்திற்கு பின் அவரது வாழ்க்கை தலைகீழாய் மாறிப்போனது. கடுமையான பணக் கஷ்டத்தால், கிடைத்த வேலையெல்லாம் செய்து வந்த ரமேஷ் பாபு, ரமேஷ் டூர்ஸ் & டிராவல்ஸ் என்ற பெயரில் சொந்தமாக போக்குவரத்து தொழில் தொடங்கினார். தனது தொழிலுக்காக முதன் முதலில் மாருதி ஆம்னி காரை ரமேஷ் வாங்கியுள்ளார். நாளைடைவில் அவரது தொழில் நல்ல வளர்ச்சி அடைந்துள்ளது.
இதையடுத்து அவர் அதிக வசதிகளைக் கொண்ட சொகுசு கார்களை ஒவ்வொன்றாக வாங்க ஆரம்பித்தார். முதல் சொகுசு காராக மெர்சிடஸ் ஈ க்ளாஸ் செடன் மாடல் காரை ரூ.75 லட்சத்திற்கு வாங்கியுள்ளார். தன்னுடைய டிராவல்ஸ் நிறுவனத்தை கவனித்துக் கொண்டே சலூனையும் நடத்தி வந்துள்ளார். அவருடைய தொழில் வளர வளர, அவரிடம் இருந்த சொகுசு கார்களின் எண்ணிக்கையும் அதிகரித்தது. இந்நிலையில், தற்போது ரமேஷ் இந்தியாவிலேயே அதிக கார்களை சொந்தமாக வைத்துள்ள நபர் என்ற சாதனையை படைத்துள்ளார். ஆம், தற்போது வரை 400-க்கும் மேற்பட்ட கார்களை ரமேஷ் வாங்கியுள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ.1200 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
சலூன் முதலாளியான ரமேஷிடம் ரூ.3 கோடி மதிப்புள்ள ரோல்ஸ் ராய்ஸின் கோஸ்ட் மாடல் கார், ரூ.2.6 கோடி மதிப்புள்ள மெர்சிடஸ் மேபேக் S600, பிஎம்டபிள்யூ, ஜாகுவார், பெண்ட்லி சீடன் என பல சொகுசு கார்கள் உள்ளது. மேலும், இவரின் டிராவல்ஸ் நிறுவனத்தில் 300-க்கும் மேற்பட்ட பணியாளர்கள் வேலை செய்கின்றனர். ஐஸ்வர்யா ராய், அமிதாப் பச்சன், அமீர் கான், சச்சின் டெண்டுல்கர் ஆகிய பிரபலங்கள் இவரின் வாடிக்கையாளர்கள்.