பொதுவாக குளிர் காலத்தில் முடி அதிகம் வறட்சி அடைந்து முடி உதிர்வு ஏற்படும். ஒரு சிலர் தினமும் தலைக்கு குளிப்பது உண்டு ஆனால் இது முற்றிலும் தவறு. இப்படி அடிக்கடி தலைக்கு குளிப்பதால். தலை முடியில் அதிக வறட்சி ஏற்படும். முடி உத்திர முக்கிய காரணம் முடி வறட்சி தான். இதனால் உங்கள் தலைமுடியை வாரத்திற்கு 2 முறை வாஷ் செய்வது தான் நல்லது. இதனால் முடியில் அதிக வறட்சி ஏற்படாமல் இருக்கும். தலைக்கு குளித்த பிறகு, பலர் ஹேர் ட்ரையர் பயன்படுத்தி தங்களின் கூந்தலை உலர்த்துகின்றனர். இப்படி செய்வதால் உங்கள் தலைமுடி அதிகம் உதிர்ந்து விடும். அதனால் முடிந்த வரை உங்கள் தலைமுடியை இயற்கையாக காட்டன் துண்டை பயன்படுத்தி உலர வைக்கலாம்.
தற்போது குளிர் காலம் என்பதால் பெரும்பான்மையான மக்கள், குளிப்பதற்கு வெந்நீரைப் பயன்படுத்துவார்கள். அதே வெந்நீரை தான் அவர் தலைக்கும் பயன்படுதுவாரல். ஆனால் அப்படி வெந்நீரை பயன்படுத்தி உங்கள் தலைமுடியை கழுவும் போது, உங்கள் கூந்தல் வறட்சியாக்கி, முடி உதிரும் பிரச்சனை அதிகரிக்கும். இந்த பழக்கத்தை மாற்றி விட்டாலே குளிர்காலத்தில் முடி கொட்டும் பிரச்சனை பாதி தீர்ந்து விடும். இதனால் உடலுக்கு வெந்நீர் பயன்படுத்தினாலும், கூந்தலுக்கு வெந்நீரை தவிர்ப்பது நல்லது.
6-8 வாரங்களுக்கு ஒருமுறை உங்கள் தலைமுடியை வெட்டி, கண்டிஷனிங் ஷாம்பு பயன்படுத்துவது முடி உதிர்வதை தடுக்கிறது. ஏனென்றால் நீங்கள் கண்டிஷனர் பயன்படுத்தும் போது, அது முடியை ஈரப்பதத்துடன் வைத்திருக்கும். இதனால் முடி உதிர்வு பிரச்சனையை எளிதில் தீர்க்கலாம். உங்களுக்கு விருப்பமானால் நீங்கள் ஒரு நல்ல சீரமை பயன்படுத்தலாம். இதனால் உங்கள் தலைமுடிக்கு மிருதுவான தோற்றத்தைக் கொடுத்து, பட்டுப் போல் ஆக்குகிறது.
Read more: ஆம்லேட் vs அவித்த முட்டை.. காலை உணவிற்கு எது பெஸ்ட்??