fbpx

வந்தது உத்தரவு… தடையை மீறி கடலில் குளித்தால் இனி அபராதம்…! மாவட்ட நிர்வாகம் எடுத்த அதிரடி முடிவு…!

புதுச்சேரியில் தடையை மீறி கடலில் குளித்தால் அபராதம் விதிக்கப்படும் என மாவட்ட நிர்வாகம் தெரிவித்துள்ளது.

புதுச்சேரியில் பாண்டி மெரினா, சின்ன வீராம்பட்டினம் கடற்கரை, ரோமேனட் கடற்கரை, ரூபி கடற்கரை, நோணாங்குப்பம் கடற்கரை போன்ற கடற்கரைகள் இருப்பதினால் சுற்றுலாப் பயணிகள் அதிகளவு வந்து செல்கின்றனர். இப்பகுதிகளில் சுனாமிக்கு பிறகு கருங்கற்கள் கொட்டப்பட்டது. கடலில் இறங்கி விளையாட முடியாமல் சுற்றுலா பயணிகள் அவதி அடைந்து வருகின்றனர்.

இந்த நிலையில் தலைமைச் செயலகம் எதிரே கூம்பு வடிவமைப்பில் கடலில் இறக்கப்பட்டது, அதனால் அப்பகுதிகளில் மணல் பரப்பு உருவாகியதால் சுற்றுலாப் பயணிகள் மணலில் இறங்கி உற்சாகமாக விளையாடி வருகின்றனர். ஆனால் அப்பகுதியில் விளையாடும் சுற்றுலாப் பயணிகள் ஆபத்தை உணராமல் கடலில் இறங்கி குளிக்கும் போது ராட்சத அலைகள் ஏற்படுகின்றது.

கடந்த 5 ஆண்டு காலத்தில் இந்த 4 கடற்கரையில் மட்டும் 67 சுற்றுலா பயணிகள் உயிரிழந்தனர். இந்த நிலையில் தடையை மீறி கடலில் இறங்கி குளித்தால் அபராதம் மற்றும் தண்டனை விதிக்க மாவட்ட நிர்வாகம் முடிவு செய்துள்ளது ‌

Vignesh

Next Post

மாரடைப்பு ஏற்படும் என்ற பயமா.! இந்த 4 சூப்பர் உணவுகளை சாப்பிடுங்க போதும்.!?

Fri Jan 26 , 2024
நவீன காலகட்டத்தில் நாம் உண்ணும் உணவு பழக்கங்களும், மோசமான வாழ்க்கை முறைகளும் நம் உடல் நலனில் பல்வேறு பிரச்சினைகளை ஏற்படுத்துகிறது. இதனால் உடல் உறுப்புகள் சேதமடைந்து உடலில் பல்வேறு நோய்க்கிருமிகள் தாக்குகின்றன. குறிப்பாக இதயம் மற்றும் நரம்பு பகுதிகள் இந்த தவறான உணவு பழக்கத்தினால் மிகவும் சேதமடைகிறது. இந்த தவறான உணவு பழக்கங்கள் உடலில் பல்வேறு உறுப்புகளில் கொழுப்புகளை அதிகப்படுத்துகிறது. குறிப்பாக இதயத்திற்கு இரத்தத்தை எடுத்து செல்லும் நரம்புகளில், மற்றும் […]

You May Like