fbpx

Battlegrounds Mobile India கேம் கூகுள், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கம்.. ஏன் தெரியுமா..?

BGMI என அழைக்கப்படும் Battlegrounds Mobile India, Google Play Store மற்றும் Apple App Store ஆகியவற்றில் இருந்து நீக்கப்பட்டது..

Battlegrounds Mobile India (BGMI) என்பது PUBG மொபைலின் இந்தியப் பதிப்பாகும், 2021 ஆம் ஆண்டு ஜூலை 2 ஆம் தேதி ஆண்ட்ராய்டு சாதனங்களுக்காக கேம் வெளியிடப்பட்டது, மேலும் 2021 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 ஆம் தேதி, தேசிய பாதுகாப்புக் காரணங்களுக்காக சீன ஆப்ஸுடன் PUBG ஐ அரசாங்கம் தடை செய்த பிறகு Battlegrounds Mobile India கேம் பிரபலமானது.. இந்நிலையில் இந்த கேம் கூகுள் பிளே ஸ்டோர், ஆப்பிள் ஆப் ஸ்டோரில் இருந்து நீக்கப்பட்டுள்ளது..

கூகுள் செய்தித் தொடர்பாளர் இதுகுறித்து பேசிய போது “ஆர்டரைப் பெற்றவுடன், நிறுவப்பட்ட செயல்முறையைப் பின்பற்றி, பாதிக்கப்பட்ட டெவலப்பருக்குத் தெரிவித்துள்ளோம், மேலும் இந்தியாவில் உள்ள Play Store இல் கிடைக்கும் செயலிக்கான அணுகலைத் தடுத்துள்ளோம்” என்று தெரிவித்தார். ஆப்பிள் தனது ஆப் ஸ்டோரிலிருந்து பயன்பாட்டையும் நீக்கியது. எனினும் இந்த கேமை உருவாக்கிய கிராஃப்டன் நிறுவனம் இதுவரை இதுகுறித்து கருத்து கருத்து தெரிவிக்கவில்லை.

இதனிடையே இந்த மாத தொடக்கத்தில், Battlegrounds Mobile India கேம், 100 மில்லியன் பதிவு செய்யப்பட்ட பயனர்களின் எண்ணிக்கையை தாண்டியதாக அறிவித்தது. BGMI இந்தியாவில் மிகவும் விரும்பப்படும் விளையாட்டாக ஒரு வருடத்தை நிறைவு செய்துள்ளதாகவும் அந்நிறுவனம் தெரிவித்திருந்தது..

இந்தியாவின் கேமிங் சூழலை மேம்படுத்த 100 மில்லியன் டாலர் முதலீடு செய்யப்பட்டது
கடந்த ஆண்டில், கேம் டெவலப்பர், இந்தியாவின் உள்ளூர் வீடியோ கேம், இ-ஸ்போர்ட்ஸ் மற்றும் பொழுதுபோக்கு ஸ்டார்ட்அப்களை மேம்படுத்த, ஆரோக்கியமான கேமிங் ஸ்டார்ட்-அப் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்க கிட்டத்தட்ட $100 மில்லியன் முதலீடு செய்தது என்பது குறிப்பிடத்தக்கது..

Maha

Next Post

’கூடங்குளம் மக்களுக்கு வேலை வழங்குவது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’..! - மத்திய அரசு

Fri Jul 29 , 2022
கூடங்குளம் மக்களுக்கு வேலைவாய்ப்பு குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கப்படவில்லை என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மாநிலங்களவையில் திமுக உறுப்பினர் ராஜேஷ்குமார், ”கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு நிலம் வழங்கியவர்களுக்கு வேலை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டதா? இதுவரை வழங்கிய வேலை விவரங்கள் என்ன? என்பது தொடர்பான கேள்விகளை முன்வைத்தார். இதற்கு, பிரதமர் அலுவலகம் மற்றும் அறிவியல் தொழில்நுட்பத்துறை இணை அமைச்சர் (தனி பொறுப்பு) பதில் அளித்தார். அதில், ”கூடங்குளத்தில் அணுமின் நிலையம் […]
’கூடங்குளம் மக்களுக்கு வேலை வழங்குவது குறித்து எந்த வாக்குறுதியும் அளிக்கவில்லை’..! - மத்திய அரசு

You May Like