பிக்பாஸ் 7வது சீசன் நாளை ஆரம்பமாக உள்ள உள்ள நிலையில், விக்ரம் படத்தின் “நாயகன் மீண்டும் வரார்” பாடலுடன் அடுத்த ப்ரோமோ வெளியாகி உள்ளது.
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 7 நிகழ்ச்சி நாளை பிரம்மாண்டமாக தொடங்க உள்ளது. அதற்கு முன் ஆண்டவர் கமல்ஹாசன் ஆயத்தமாகி “நாயகன் மீண்டும் வாரார் எட்டுத்திக்கும் பயம்தானே” என்ற பாடலுடன் மாஸ் நடைபோட்டு நடந்து வருவது போல அடுத்த ப்ரோமோ வெளியாகியுள்ளது.
ரசிகர்கள் அனைவரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருக்கும் பிக்பாஸ் சீசன் 7 நாளை மாலை 6 மணிக்கு விஜய் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது. மீம்ஸ்களை போட தற்போதே நெட்டிசன்கள் தயாராகி வருகின்றனர். இந்த சீசனில் எந்தெந்த போட்டியாளர்கள் களமிறங்க உள்ளனர் என்பது நாளை தெரியவரும். நிகழ்ச்சியில் என்ன நடக்க போகிறது என்பதை பொறுத்திருந்து பாப்போம்.