இந்திய கிரிக்கெட் வாரியத்தில் தலைவர் மற்றும் செயலாளர் ஆகியோரின் பதவிக்காலம் நீட்டிப்பது தொடர்பான வழக்கில் உச்சநீதிமன்றம் அனுமதி அளித்து உத்தரவிட்டுள்ளது.
இந்தியகிரிக்கெட் வாரிய தலைவர் சவ்ரவ் கங்குலி , செயலாளர் ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கு பி.சி.சி.ஐ.-ல் இதுவரை விதிமுறைகள் இல்லை. எனவே இவர்களின் பதவிக்காலம் நீட்டிப்புக்கு பி.சி.சி.ஐக்கு அனுமதி தேவை எனவே இது தொடர்பாக இந்த விவகாரத்தில் விதிகளை திருத்த பி.சி.சி.ஐக்கு அதிகாரம் வேண்டும் எனவே அனுமதி கேட்டு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.

இந்த வழக்கை உச்சநீதிமன்ற நீதிபதி டி ஒய் சந்திர சுக்லா அமர்வு விசாரித்தது. பதவிக்காலங்களுக்கு இடையே இது தொடர்பான விதியை பி.சி.சி.ஐ. திருத்திக் கொள்ளலாம். மேலும் இந்த விவகாரத்தில் எந்த முறைகேடும் நடைபெற வாய்ப்பில்லை எனவே விதிகளில் திருத்தம் செய்துகொள்ள அனுமதி அளித்து இந்திய கிரிக்கெட் வாரியத்துக்கு ஆணை பிறப்பித்தது.
புதிய விதியால் மாநில கிரிக்கெட் , இந்திய கிரிக்கெட் வாரியத்தில் இடைவிடாமல் ஒருவர் தலைவர் பதவியில் தொடர முடியும் கங்குலி , ஜெய்ஷா ஆகியோரின் பதவிக்காலத்தை நீட்டிக்கவும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.