fbpx

உஷார்..!! வெளியூர் சென்ற கணவர்..!! தூங்கிக் கொண்டிருந்த இளம்பெண்ணின் வாயை பொத்தி கூட்டு பலாத்காரம்..?

நாமக்கல் மாவட்டம் சுல்தான் பேட்டையில் இளம்பெண் ஒருவர் வாடகை வீட்டில் வசித்து வருகிறார். இவரது கணவர் லாரி டிரைவராக இருப்பதால், வெளி மாநிலத்திற்கு சரக்கு ஏற்றி சென்றிருக்கிறார். பெண் குழந்தையுடன் அந்த இளம்பெண் மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இதை சிலர் நோட்டமிட்டு இருக்கிறார்கள். அதிகாலையில் அந்த பெண் தூங்கிக் கொண்டிருந்தபோது திடீரென்று முகமூடி அணிந்த 5 பேர் கொண்ட கும்பல், அந்த பெண்ணின் வாயை பொத்தி பாலியல் பலாத்காரம் செய்ய முயற்சித்துள்ளனர். அவர்களின் பிடியிலிருந்து அந்த இளம்பெண் தப்பித்து வாசலுக்கு ஓடிவந்து காப்பாற்றுங்கள் காப்பாற்றுங்கள் என்று சத்தம் போட்டுள்ளார்.

அதிகாலையில் இளம்பெண் போட்ட அந்த சத்தத்தில் அக்கம் பக்கத்தினர் அதிர்ச்சியுடன் எழுந்து ஓடி வந்துள்ளனர். இதை கண்டதும் முகமூடி அணிந்திருந்த அந்த மர்ம நபர்கள் 5 பேரும் தாங்கள் வந்த பைக்கில் ஏறி தப்பி இருக்கிறார்கள். பின்னர் பாதிக்கப்பட்ட பெண்ணை அப்பகுதியினர் அழைத்துச் சென்று காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். ப்லீசார் வழக்கு பதிவு செய்து அப்பகுதியில் இருந்து சிசிடிவி கேமராவில் பதிவாகி இருக்கும் காட்சிகளை வைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

கணவர் வெளியூர் வேலைக்கு சென்று இருப்பதையும் அந்த இளம்பெண் தனியாக இருக்கிறார் என்பதையும் நோட்டமிட்டு தான் அந்த மர்ம நபர்கள் கூட்டு பாலியல் பலாத்கார முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது போலீசாருக்கு தெரிய வந்திருக்கிறது. இதை வைத்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இச்சம்பவம் அங்கு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Chella

Next Post

நடத்தையில் சந்தேகப்பட்ட கணவர் டார்ச்சர் தாங்க முடியாமல் மனைவி செய்த செயல்…..! இறுதியில் கணவனுக்கு ஏற்பட்ட பரிதாபம்……!

Wed May 17 , 2023
சேலம் மாவட்டம் ஜாகீர் ரெட்டிப்பட்டி ஓடை தெருவை சேர்ந்தவர் ரமேஷ் (31), இவருடைய மனைவி மணிமேகலை(28). இந்த தம்பதிகளுக்கு 2 குழந்தைகள் இருக்கின்றன. இந்த நிலையில்தான் ரமேஷ் குடிப்பழக்கத்திற்கு அடிமையானவர் என்று கூறப்படுகிறது. மேலும் நாள்தோறும் குடித்துவிட்டு வந்து, மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு தகராறில் ஈடுபட்டு வந்திருக்கிறார். அந்த வகையில், நேற்று முடித்துவிட்டு வீட்டிற்கு வந்து மணிமேகலை அடித்து புதைத்து துன்புறுத்தி இருக்கிறார். அதன்பிறகு அவர் தூங்குவதற்காக சென்று விட்டார் […]

You May Like