முதியவர் ஒருவர் சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த சைனா போன் திடீரென வெடித்து சிதறியதால், பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
கேரள மாநிலம் திருச்சூர் பகுதியில் 70 வயது முதியவர் டீக்கடையில் டீ குடித்துக் கொண்டிருந்தார். அப்போது அவரது சட்டை பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் சுதாரித்துக் கொண்டு சட்டையை உடனடியாக கழட்டி வெளியே வீசினார். இதனால் அவருக்கு எவ்விதமான காயமும் ஏற்படவில்லை. இதுகுறித்து அவரிடம் விசாரணை நடத்தியபோது, மலிவாக இருக்கிறது என்பதற்காக ஆயிரம் ரூபாய்க்கு சைனா செல்போனை வாங்கியதாகவும் முழு சார்ஜ் போட்டு விட்டு தனது பாக்கெட்டில் வைத்திருந்த நிலையில், அது வெடித்து சிதறியதாகவும் கூறியிருக்கிறார்.
மலிவாக இருக்கிறது என்பதால் சைனா ஃபோனை வாங்குவதை தவிர்க்க வேண்டும் என்றும் குறிப்பாக குறைந்த விலையில் தரம் குறைந்த ஃபோன்களை வாங்கினால் இதுபோன்று வெடிக்க வாய்ப்பு இருப்பதாகவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.