E.coli Virus: அமெரிக்காவின் பல மாநிலங்களில், உணவில் காணப்படும் ஈ.கோலி வைரஸால் டஜன் கணக்கான மக்கள் நோய்வாய்ப்பட்டிருப்பதாக அமெரிக்க நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையம் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளது.
அமெரிக்காவில் பிரபல உணவு உணவகத்தில் பர்கர் சாப்பிட்ட நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார். 10 பேர் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகின்றனர். மேலும், அமெரிக்காவின் கொலாராடோ மற்றும் நெப்ராஸ்கா உட்பட 10 மாநிலங்களில் பர்கர் சாப்பிட்ட 49 பேர் நோய்வாய்ப்பட்டுள்ளனர். உணவகங்களில் விற்கப்படும் Quarter Pounder பர்கரில் மாட்டு இறைச்சி அல்லது வெங்காயத் துண்டுகளில் E. coli பாக்டீரியா இருப்பதாக நம்பப்படுகிறது.
குறிப்பாக எந்த உட்பொருளில் பாக்டீரியா உள்ளது என்பது ஆராயப்படுகிறது. தற்போதைக்கு பாதிக்கப்பட்ட சில மாநிலங்களின் McDonald’s கிளைகளில் மாட்டு இறைச்சியும் வெங்காயத் துண்டுகளும் அகற்றப்பட்டுள்ளன. சில கிளைகளில் Quarter Pounder பர்கரின் விற்பனை நிறுத்தப்பட்டுள்ளது. E coli மனிதர்களின் குடல்களில் இயல்பாக இருக்கக்கூடியது. அது பொதுவாக உடலுக்கு ஆபத்தை ஏற்படுத்தாது. பாக்டீரியாவின் சில ரகங்கள் பேதி, வயிற்று வலி, காய்ச்சல் போன்றவற்றை ஏற்படுத்தலாம். பாதிக்கப்படுவோர் பொதுவாக 7 நாள்களுக்குள் குணமடைந்துவிடுவார்கள்.
E.coli வைரஸ் என்றால் என்ன? இந்த வைரஸ் 057:H7 ஸ்ட்ரெய்ன் எனப்படும் தீவிர நோயை ஏற்படுத்துவதாக கூறப்படுகிறது. இதற்கு முன், 1993ல், முறையாக சமைக்கப்படாத பர்கர்களை சாப்பிட்ட நான்கு குழந்தைகள் இறந்தனர். ஈ.கோலை வைரஸ் தொற்று வயிற்றைப் பாதிக்கிறது. ஈ.கோலி வைரஸ் குடல் கிருமி என்று அழைக்கப்படுகிறது, இது பச்சை காய்கறிகளில் ஒட்டிக்கொண்டிருக்கும். இது பெரும்பாலும் பச்சை இறைச்சி, பச்சை காய்கறிகள், மூல பால் மற்றும் மூல பழங்களில் காணப்படுகிறது. அவற்றை முறையாகக் கழுவி சுத்தம் செய்யாவிட்டால், ஈ.கோலி பாக்டீரியா வயிற்றில் நுழைந்து வயிற்றுக் கோளாறுகளை ஏற்படுத்துகிறது.
ஈ.கோலி வைரஸில் இருந்து பாதுகாக்க ஒரே வழி உணவு மற்றும் காய்கறிகளை நன்கு சுத்தம் செய்து அவற்றை நன்கு சமைப்பதுதான். சமைத்த மற்றும் பச்சையான உணவை சாப்பிடுவதை ஒருவர் தவிர்க்க வேண்டும். சமைத்த உணவை இரண்டு மணி நேரத்திற்குள் குளிர்சாதன பெட்டியில் வைக்க வேண்டும். பச்சை பால் மற்றும் பால் பொருட்களை சாப்பிடும்போது கவனமாக இருங்கள். சமைப்பதற்கு முன் சோப்பு போட்டு கைகளை கழுவவும்.