டெங்கு பாதிப்பு குறைவாக இருந்தாலும், வரக்கூடிய பருவமழை காலக்கட்டத்தில் கவனமுடன் இருக்க வேண்டும் என்று தமிழக சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
கொசுவினால் ஏற்படக்கூடிய டெங்கு நோய் பாதிப்பு குறித்த புள்ளி விவரங்களை தமிழக சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது. கடந்த 2017ஆம் ஆண்டு 23,294 பேருக்கு டெங்கு பாதிப்பும், 65 பேர் உயிரிழந்தாகவும் கூறப்பட்டுள்ளது. 2018ஆம் ஆண்டு 4,486 பேருக்கு பாதிப்பும், 13 பேர் உயிரிழந்தும் உள்ளதாகவும், 2019ஆம் ஆண்டு 8,527 பேருக்கு பாதிப்பும், 5 பேர் உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டில் இரண்டாயிரத்து 410 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் பதிவாகவில்லை சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது. கடந்த 2021ஆம் ஆண்டில் 6 ஆயிரத்து 39 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்ட நிலையில், 8 பேர் உயிரிழந்தாகவும், இந்தாண்டு இதுவரை 3,205 பேர் பாதிக்கப்பட்ட நிலையில், உயிரிழப்பு எதுவும் இல்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், வரக்கூடிய பருவமழை காலத்தில் டெங்கு கொசு உற்பத்தியை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சுகாதார மற்றும் உள்ளாட்சித் துறை பணியாளர்கள், கொசு ஒழிப்பில் தொடர்ந்து ஈடுபட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது.