Chief Justice: உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயரில் மோசடியில் ஈடுபட்டு, பணம் பறிக்க முயற்சித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கைலாஷ் மேக்வால் என்ற நபருக்கு உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி சந்திரசூட் பெயர் கொண்ட ஐடியில் இருந்து 500 ரூபாய் பணம் கேட்டு ஒரு குறுஞ்செய்தி வந்துள்ளது. அந்த குறுஞ்செய்தியின் ஸ்க்ரீன்ஷாட்டை அவர் தனது எக்ஸ் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அதில், ” நான்தான் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி, நான் அவசரமாக கொலீஜிய ஆலோசனைக்கு செல்ல டாக்சி புக் செய்ய ரூ.500 பணம் வேண்டும். நான் நீதிமன்றத்தை சென்றதும் உங்களது பணத்தை திருப்பிக் கொடுத்து விடுகிறேன்” என்று தெரிவித்துள்ளார்.
இந்த குறுஞ்செய்தியின் நம்பகத்தன்மையை அதிகரிக்க இதனை எனது ஐபாட்-ல் இருந்து அனுப்புகிறேன் என்று இன்னொரு குறுஞ்செய்தியை அவர் அனுப்பியுள்ளார். இந்த பதிவுஎக்ஸ் தளத்தில் வைரலாகி வருகிறது.
Readmore: மருத்துவர் கற்பழிப்பு, கொலை!. போலீஸ் கமிஷனருக்கு தொடர்பா?. சஞ்சய் ராயின் வாகனம் மூலம் வெளியான தகவல்!