fbpx

பெண்களே உஷார்..!! வீட்டில் தனியாக இருந்த பெண் மீது பாய்ந்த டெலிவரி ஊழியர்..!! சென்னையில் அதிர்ச்சி

சென்னை நீலாங்கரையில் உள்ள வெட்டுவாங்கேணி கணேஷ் நகரைச் சேர்ந்தவர் ஜெயபால் (35). இவர், மளிகைப் பொருட்களை டோர் டெலிவரி செய்யும் தனியார் நிறுவன ஊழியராக பணியாற்றி வருகிறார். அதன்படி, முன்னதாக துரைப்பாக்கம் எம்சிஎன் நகரைச் சேர்ந்த பெண் ஒருவர் மளிகைப் பொருட்கள் ஆர்டர் செய்திருந்த நிலையில், அவரது வீட்டுக்கு மளிகைப்பொருட்களை டெலிவரி செய்ய ஜெயபால் சென்றுள்ளார். அந்த வீட்டில் இருந்த பெண் தனியாக இருப்பதை கண்டறிந்த ஜெயபால், திடீரென அந்தப் பெண்ணிடம் அத்துமீறி பாலியல் தொல்லை கொடுத்துள்ளார்.

இதனால் பெரும் அதிர்ச்சி அடைந்த அப்பெண், கூச்சலிடத் தொடங்கிய நிலையில், உஷாரான ஜெயபால், அந்தப் பெண்ணை தாக்கியதுடன் அங்கிருந்து தப்பியோடியுள்ளார். இச்சம்பவம் குறித்த பாதிக்கப்பட்ட பெண், காவல் நிலையத்தில் அளித்த புகாரின் அடிப்படையில், ஜெயபாலை துரைப்பாக்கம் காவல்துறையினர் கைது செய்தனர். மேலும், வன்கொடுமை தடுப்புச் சட்டம், ஆயுதத்தால் தாக்கியது ஆகிய பிரிவுகளின் கீழ் ஜெயபால் மீது வழக்குப்பதிவு செய்து அவரைக் கைது செய்து சிறையில் அடைத்தனர்.

Chella

Next Post

ஏல சீட்டு நிறுவனம் நடத்தி 96 லட்ச ரூபாய் மோசடி செய்த கணவன் மனைவி அதிரடி கைது….! கோவை காவல்துறையினர் நடவடிக்கை….!

Sun Apr 9 , 2023
கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் ரமேஷ்குமார், சுமதி என்ற தம்பதியினர் ஸ்ரீ முருகன் சிறுசேமிப்பு என்ற பெயரில் நிதி நிறுவனம் ஒன்றை நடத்தி வந்தனர். இதில் கடந்த 2017 ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் 2022 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 30ஆம் தேதி வரையிலான காலகட்டத்தில் 86 சீட்டு பிரிவுகளின் கீழ் 41 பேர் முதலீடு செய்து இருக்கிறார்கள். இவர்களில் சூலூர் கே.கே.சாமி நகரை […]

You May Like