மகாராஷ்டிர மாநிலம் தானே மாவட்டம் பிவாண்டி நகரில் கொங்கன் பகுதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து துர்நாற்றம் வீசியுள்ளது. இதனால் சந்தேகமடைந்த வீட்டின் உரிமையாளர் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தார். அங்கு இன்று காலை வந்த போலீசார், வீட்டின் கதவை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது சமையல் அறையில் ஒரு பெண் கழுத்தழுத்துப் படுகொலை செய்யப்பட்டுக் கிடந்தார். அவர் 3 நாட்களுக்கு முன் கொலை செய்யப்பட்டிருக்கலாம் என்று கூறப்படுகிறது.
விசாரணையில், கணவரை விவகாரத்து பெற்ற 36 வயது பெண் 11 மாதங்களாக லிவ்-இன் பாட்னருடன் வாழ்ந்து வந்தது தெரியவந்தது. அத்துடன் பெண் தோழியும் தங்கியிருந்ததாக கூறப்படுகிறது. இந்த கொலையின் பின்னணியில் லிவ்-இன் பார்ட்னர் மற்றும் பெண் நண்பரின் பங்கு இருப்பதாக போலீஸார் சந்தேகித்துள்ளனர். இதையடுத்து, அவர்கள் இருவரையும் போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.