fbpx

மக்களே கவனமுடன் இருங்கள்!… தூங்கும்போது கூட ஒட்டுக்கேட்கிறது!… வாட்ஸ் அப்பை நம்ப முடியாது!… எலான் மஸ்க் ட்வீட்!

இரவில் தூங்கும்போது கூட ஒட்டுக்கேட்கிறது என்ற தனது நிறுவன ஊழியரின் புகாரை தொடர்ந்து வாட்ஸ் அப்பை (WhatsApp) “யாரும் நம்ப வேண்டாம்” என்று ட்விட்டரின் உரிமையாளர் எலான் மஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

உலகம் முழுவதும் ஆன்ட்ராய்டு போன் வைத்திருக்கும் பலரும் வாட்ஸ்-அப்பை பயன்படுத்தி வருகிறார்கள். சமீப தினங்களாக அனைவருக்கும் வாட்ஸ் ஆப் செயிலியில் இருந்து பல போலி அழைப்புகள் வருகிறது. இதனால் சிலர் பணத்தை இழந்து வருகின்றனர். இந்தநிலையில், அமெரிக்காவில் உள்ள
ட்விட்டர் நிறுவனத்தில் என்ஜினீயராக பணியாற்றும் ஃபோட் டபிரி (Foad Dabiri) என்பவர், தனது ஆண்ட்ராய்டு டாஷ்போர்டின் (Android Dashboard) ஸ்கிரீன் ஷாட்டை ட்விட்டரில் பகிர்ந்துள்ளார். அந்த ஸ்கிரீன்ஷாட்டின் வழியாக, வாட்ஸ்அப் செயலியானது அவர் தூங்கும் போதும் கூட, பேக்கிரவுண்டில் அவரது போனின் மைக்ரோஃபோனை அணுகியது அம்பலமாகி உள்ளது. ஃபோட் டபிரியின் கூற்றுப்படி, அதிகாலை 4:20 மணி முதல் 6:53 மணி வரை வாட்ஸ்அப் ஆனது அவரது ஸ்மார்ட்போனின் மைக்ரோஃபோனை பயன்படுத்தியுள்ளது. “நான் தூங்கிக்கொண்டிருந்தபோதும் கூட வாட்ஸ்அப் எனது போனின் மைக்ரோஃபோனைப் பயன்படுத்துகிறது.. இங்கே என்ன நடக்கிறது?” என்று அவர் ட்வீட் செய்துள்ளார்.

ஃபோட் டபிரியின் ட்வீட்க்கு ரிப்ளை செய்யும் விதமாக, ட்விட்டர் நிறுவனத்தின் சிஇஓ-வும், உலக பணக்காரர்களில் ஒருவருமான எலான் மஸ்க் (Elon Musk), “வாட்ஸ்அப்பை நம்ப முடியாது’ என்று கூறியுள்ளார். வாட்ஸ்அப் மீதான இந்த குற்றசாட்டு வாட்ஸ்அப் பயனர்கள் மத்தியில் “இது ஒட்டுக்கேட்கிறதா?” என்கிற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்து வாட்ஸ்அப் நிறுவனம் விளக்கம் ஒன்றையும் அளித்துள்ளது. “இந்த சிக்கல் ஆண்ட்ராய்டில் (Android) உள்ள பக்கால் (Bug) ஏற்பட்டுள்ளது. அது தான் தங்கள் தனியுரிமை டாஷ்போர்டில் (Privacy dashboard) உள்ள தகவல்களை தவறாக குறிப்பிடுகிறது” என்று வாட்ஸ்அப் நிறுவனம் ட்வீட் செய்துள்ளது.

மேலும் தான் ஒட்டுகேட்கப்படுவதாக குற்றம் சாட்டியுள்ள ஃபோட் டபிரி பயன்படுத்திய ஸ்மார்ட்போன் ஒரு கூகுள் பிக்சல் (Google Pixel) மாடலாகும். எனவே இந்த விஷயத்தை (அதாவது ஆண்ட்ராய்டு பக் பற்றி) ஆராய்ந்து அதற்கான தீர்வை வழங்குமாறு கூகுளிடம் கோரிக்கை விடுத்துள்ளதாகவும் வாட்ஸ்அப் கூறியுள்ளது. மற்றொரு ட்வீட்டில், வாட்ஸ்அப் பயனர்கள் தங்களுடைய மைக்ரோஃபோன் செட்டிங்ஸ் (Microphone settings) மீது முழு கட்டுப்பாட்டையும் கொண்டுள்ளனர். ஒரு பயனர் கால் (Call) செய்யும் போது அல்லது வாய்ஸ் நோட் (Voice Note) அல்லது வீடியோவை ரெகார்ட் (Video Record) செய்யும் செய்யும் போது மட்டுமே வாட்ஸ்அப்பால் அவரது மொபைல் போனில் உள்ள மைக்கை (Mic) அணுக முடியும்” என்றும் வாட்ஸ்அப் தெளிவுபடுத்தியுள்ளது. தொடர்ச்சியான ட்வீட்களின் வழியாக “ட்விட்டர் பொறியாளருடன் தொடர்பு கொண்டுள்ளோம், அவர் தனது பிக்சல் போன் மற்றும் வாட்ஸ்அப்பில் சந்தித்துள்ள சிக்கலை பதிவு செய்துள்ளோம்” என்றும் வாட்ஸ்அப் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

Truecaller மூலம் வரும் SPAM கால்!... வாட்ஸ் அப் நிறுவனத்திற்கு மத்திய அரசு நோட்டீஸ்!... தடுப்பது எப்படி?

Fri May 12 , 2023
Truecaller மூலம் சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களில் இருந்து வரும் SPAM கால்கள் குறித்து வாட்ஸ்அப் நிறுவனத்திற்கு அரசு நோட்டீஸ் அனுப்ப உள்ளதாக மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் இணையமைச்சர் ராஜீவ் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே, வாட்ஸ்அப் பயனர்கள் பலருக்கும் எத்தியோப்பியா, மலேசியா, இந்தோனேசியா , கென்யா, வியட்நாம் உள்ளிட்ட சர்வதேச நாடுகளின் மொபைல் எண்களிலிருந்து அழைப்புகள் வருவதாக புகார்கள் எழுந்து வருகிறது. உலகளவில் பெரும்பாலான […]

You May Like