fbpx

உஷார்..!! பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து விபத்து..!! இளைஞர் மருத்துவமனையில் அனுமதி..!!

கேரள மாநிலத்தைச் சேர்ந்த ரயில்வே ஊழியர் ஹரிஸ் ரகுமான் (23), தனது ஜீன்ஸ் பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் திடீரென வெடித்து சிதறியதில் அதிர்ச்சியடைந்தார். செல்போன் வெடித்து சிதறியதில் ஜீன்ஸ் பேண்டிலும் தீ பிடித்தது. உடனடியான பேண்ட்டில் பிடித்த தீயை சமயோசிதமாக ஹரிஷ் ரகுமான் அணைத்து விட்டார். ஆனாலும், இந்த விபத்தில் அவருக்கு தீக்காயம் ஏற்பட்டது. கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஹரிஷ் ரகுமான், இந்த செல்போனை வாங்கியதாக கூறப்படுகிறது. தீக்காயமடைந்த நிலையில், ஹரிஷ் ரகுமான் அருகில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.

திடீரென பேண்ட் பாக்கெட்டில் வைத்திருந்த செல்போன் வெடித்தது அந்த பகுதியில் இருந்தவர்களை அதிர்ச்சிக்குள் ஆழ்த்தியுள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு கேரளாவில் 8 வயது சிறுமி செல்போனில் விளையாடிக் கொண்டிருந்த போது, திடீரென செல்போன் வெடித்ததில் உயிரிழந்தார். அடுத்தடுத்து செல்போன் பயன்படுத்துபவர்கள் விபத்துக்குள்ளாவது, உயிரிழப்பது பொதுமக்களிடையே பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. செல்போனைப் பயன்படுத்துவது குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும். செல்போன் பழுதடைந்தால் தரம் குறைந்த டூப்ளிகேட் பொருட்களைப் பயன்படுத்தி பழுதை சரி செய்யக்கூடாது. சார்ஜரில் செல்போனைப் போட்டுக் கொண்டே பேச கூடாது.

Chella

Next Post

ட்ரோன் மூலம் ரத்தம் எடுத்துச் செல்லும் வசதி...! இந்தியாவின் அசத்தலான கண்டுபிடிப்பு...!

Thu May 11 , 2023
இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் நோக்கத்தின் தொடர்ச்சியாக, இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐசிஎம்ஆர்) மற்றும் மத்திய சுகாதார அமைச்சகத்தின்  ஐட்ரோன் முன்னெடுப்பின் கீழ் ட்ரோன்கள் மூலம் ரத்தம் விநியோகம் செய்வதன் சோதனை ஓட்டம் வெற்றிகரமாக நடத்தப்பட்டது. தொடக்க சோதனையின்போது, ஜிஐஎம்எஸ் மற்றும் எல்ஹெச்எம்சி-யிலிருந்து 10 யூனிட் ரத்தம் எடுத்துச் செல்லப்பட்டது. இந்தியாவில் ட்ரோன் பயன்பாட்டை விரிவுபடுத்தும் பிரதமரின் தொலைநோக்குப் பார்வையானது விவசாயம், பாதுகாப்பு, பேரிடர் நிவாரணம் மற்றும் சுகாதாரப் […]

You May Like