fbpx

மூட்டுவலி பிரச்சனையை சரிசெய்யும் கடற்கரை மணல்!… எப்படி தெரியுமா?… விவரம் உள்ளே!

கடற்கரை மணலில் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்தால் மூட்டுவலி உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகள் நீங்கும் என்று மருத்துவர்கள் அறிவுறுத்துகின்றனர்.

இன்றைய காலகட்டத்தில் பரவலாகக் காணப்படும் ஒரு நோயாக மூட்டு வலி உள்ளது. உடலில் கால்சிய சத்து குறைவதும், உடலில் நோய் எதிர்ப்புச் சக்தி குறைவதுமே இதற்கு முக்கிய காரணம் என சொல்லப்படுகிறது. இந்த மூட்டு வலி அதிக அளவில் வயதானவர்களுக்கே ஏற்படுவதாகக் கூறப்படுகிறது. ஆனால், தற்போது இந்த பாதிப்பு இளம் வயதினருக்கும் ஏற்படுகிறது. மூட்டுகள் தேய்மானம் அடையாமல் இருப்பதற்கு வைட்டமின் D3 மற்றும் கால்சியம் அவசியம் என்றும் இவை இரண்டும் சூரிய ஒளியில் மிகுதியாக உள்ளது என்றும் மருத்துவர்கள் கூறுகின்றனர்.

கம்பு, ராகி, வரகு உள்ளிட்ட சிறுதானியங்களில் கால்சியம் சத்து அதிகம் உள்ளதால், இவற்றைச் சாப்பிடுவதன்மூலம் மூட்டு வலி வராமல் தடுக்கலாம் என்பது நாம் அனைவருக்கும் அறிந்ததே. ஆனால், மூட்டு வலி குணமாக கடற்கரை மணல் பெரிதும் உதவுகிறது என்றால் நம்ப முடிகிறதா? உண்மைதான். மருத்துவர்கள் அறிவுறுத்தலின் படி, கடற்கரை மணலில் செருப்பு அணியாமல் வெறும் கால்களில் நடைப்பயிற்சி செய்தால் பல்வேறு பலன்கள் இருப்பதாக கூறப்படுகிறது. வெறும் காலில் நடக்கும் போது பாதம் கணுக்கால் மற்றும் தடைகள் பலம் பெறும் என்றும் எனவே வெறும் காலில் நடந்தால் பல பிரச்சனைகள் நீங்கும் என்றும் மூட்டுவலி குறையும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

காலணி அணியாமல் வெறும் கால்களில் நடக்கும் போது இரத்த அளவு சீராகி விடும் என்றும் வெறுங்காலில் நடக்கும் போது நோய் எதிர்ப்பு திறனை அதிகரிக்கும் என்றும் கூறப்படுகிறது. சாதாரண தரையில் நடப்பதை விட கடற்கரை மணல் போன்ற மணல் இருக்கும் பகுதியில் அல்லது புல்வெளியில் நடந்தால் அதிக அளவு கலோரிகள் எரிக்கப்படுகின்றன என்றும் உடல் பருமனை குறைக்க இது உதவும் என்றும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்

Kokila

Next Post

ரெடியா...? இன்று காலை 10 மணி முதல்...! இளைஞர்களுக்கு மாபெரும் வேலை வாய்ப்பு முகாம்...! தவற விடாதீர்கள்...

Fri Feb 24 , 2023
வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு இன்று காலை 10 மணி முதல் வேலைவாய்ப்பு முகாம் நடைபெறும் என அரியலூர் மாவட்ட ஆட்சியர் ரமண சரஸ்வதி தெரிவித்துள்ளார். அரியலூர் மாவட்டத்தில் படித்து வேலைவாய்ப்பின்றி காத்திருக்கும் இளைஞர்களுக்கு, வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பொருட்டு ஒவ்வொரு மாதமும் இரண்டாம், மூன்றாம், நான்காம் வெள்ளிக்கிழமையில் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது. அதன் படி, இன்று அரியலூர் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி வழிகாட்டல் மையத்தில் நடைபெறவுள்ள தனியார் […]

You May Like