fbpx

Lok Sabha 2024 | “பாஜக-விற்கு அதிமுக போட்ட பிச்சை தான் 4 எம்எல்ஏக்கள்”… சிவி சண்முகம் கடும் தாக்கு.!!

Lok Sabha: அதிமுக கட்சி(ADMK) தான் பாஜக-விற்கு(BJP) தமிழகத்தில் 4 எம்எல்ஏக்களை பிச்சை போட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சித்திருக்கிறார்.

2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Lok Sabha) தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது.

கடந்த தேர்தல்களில் ஒரே அணியில் பயணித்த பாஜக(BJP) மற்றும் அதிமுக(ADMK) இந்த முறை எதிரெதிர் துருவங்களாக தேர்தலை சந்திக்கிறது. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் மற்றும் ஓபிஎஸ் அணி ஆகியவை பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்திருக்கிறது. அதிமுகவும் பாரதிய ஜனதா கட்சியை இந்த தேர்தலில் வீழ்த்த வேண்டும் என்ற முனைப்புடன் செயல்பட்டு வருகிறது.

இந்த சூழலில் இரண்டு கட்சியினரும் ஒருவரை ஒருவர் குற்றம் சாட்டி வருகின்றனர். இந்நிலையில் அதிமுகவின் முன்னாள் அமைச்சரும் தற்போதைய பாராளுமன்ற உறுப்பினருமான சிவி சண்முகம் விழுப்புரம் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பாரதிய ஜனதா கட்சியை கடுமையாக விமர்சனம் செய்திருக்கிறார். இது தொடர்பாக பேசியிருக்கும் அவர் தமிழகத்தில் பாஜகவிற்கு இருக்கும் நான்கு எம்எல்ஏக்களும் அதிமுக போட்ட பிச்சை என கடும் சொற்களை பயன்படுத்தியிருக்கிறார்.

மேலும் தொடர்ந்து பேசுகையில் அண்ணாமலையின் என் மண் என் மக்கள் யாத்திரைக்கு ஒவ்வொரு கடை கடையாக சென்று காசு வசூலித்தார்கள் எனவும் குற்றம் சாட்டி உள்ளார். மத்தியில் மோடியின் ஆட்சி இனி வேண்டாம் என்று கூறியவர் மீண்டும் பாஜக ஆட்சிக்கு வந்தால் இந்தியாவில் ஜனநாயகம் என்ற ஒன்று இல்லாமல் போய்விடும் எனவும் தெரிவித்துள்ளார். இவரது பேச்சு அரசியல் வட்டாரங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Read More: Bell Layoffs | 10 நிமிட வீடியோ காலில் அறிவிக்கப்பட்ட வேலை நீக்கம்.!! கேள்விக்குறியான 400 தொழிலாளர்களின் நிலை.!!

Next Post

Lok Sabha 2024 | செல்போன் கொண்டு செல்ல தடை.!! தேர்தல் ஆணையம் விதித்த புதிய கட்டுப்பாடு.!!

Tue Mar 26 , 2024
Lok Sabha | 2024 ஆம் வருட பொதுத்தேர்தலில் வாக்குச்சாவடிக்குள் செல்போன் எடுத்து செல்வதற்கு தேர்தல் ஆணையம்(Election Commission) தடை விதித்துள்ளது. 2024 ஆம் வருட பாராளுமன்றத் தேர்தல்(Lok Sabha) தமிழகம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் ஏப்ரல் 19ஆம் தேதி நடைபெற இருக்கிறது. பொதுத் தேர்தலை முன்னிட்டு பாதுகாப்பு நடவடிக்கைகள் பலப்படுத்தப்பட்டுள்ளது பல்வேறு கட்டுப்பாடுகளையும் தேர்தல் ஆணையம்(Election Commission) விதித்திருக்கிறது. பொதுத் தேர்தலை நியாயமான முறையில் நடத்த பல்வேறு நடவடிக்கைகளையும் […]

You May Like