Bell Layoffs | 10 நிமிட வீடியோ காலில் அறிவிக்கப்பட்ட வேலை நீக்கம்.!! கேள்விக்குறியான 400 தொழிலாளர்களின் நிலை.!!

தகவல் தொடர்பு துறையின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான பெல் தனது கம்பெனியிலிருந்து 400-க்கும் மேற்பட்ட ஊழியர்களை பணி நீக்கம் செய்துள்ளது. இந்த நிறுவனம் நடத்திய விர்ச்சுவல் மீட்டிங்கில் இந்தப் பணி நீக்கம் நடைபெற்றதாகவும் தெரிவித்துள்ளது. பெல் நிறுவனம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ததற்கு யூனிபோர் தொழில் சங்கம் தனது கண்டனங்களை பதிவு செய்திருக்கிறது. மேலும் இந்த நடவடிக்கை அவமானத்திற்கும் மேலானது என கடுமையான விமர்சனத்தை முன் வைத்திருக்கிறது.

பெல் நிறுவனத்தில் இருந்து பணி நீக்கம் செய்யப்பட்ட அனைத்து ஊழியர்களும் தங்களது வேலை நீக்க நடவடிக்கை குறித்து 10 நிமிடம் வீடியோ காலில் தங்களுக்கு அறிவிக்கப்பட்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் தங்களது மேனேஜர் வீடியோ காலில் பணி நீக்கம் குறித்த ஆணையை படித்ததாகவும் தங்களுக்கு கேள்வி கேட்க வாய்ப்பு வழங்கப்படவில்லை எனவும் தெரிவித்துள்ளனர்.

“யூனிஃபோரின் கியூபெக் இயக்குனர் தங்களது உறுப்பினர்கள் பெல் டெலிகாம் மற்றும் மீடியா நிறுவனத்திற்கு பல ஆண்டுகளாக சிறப்பான சேவையை வழங்கிய போதும் பிங்க் நோட்டீஸ் கொடுக்கப்பட்டு வேலை நீக்கம் செய்யப்பட்டதாக” தெரிவித்துள்ளார். ஆனால் இது குறித்து அறிக்கை வெளியிட்டிருக்கும் பெல் நிறுவனம் ஊழியர்களின் பணி நீக்கம் குறித்து 5 வாரங்களுக்கு முன்பே தெரியப்படுத்தியதாகவும் எந்தவித ஒளிவு மறைவின்றி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளது. மேலும் பணி நீக்கம் செய்யப்பட்ட ஊழியர்கள் தனித்தனியாக மனிதவளத்துறை இடம் பேச்சுவார்த்தை நடத்தியதாகவும் அவர்களது பேக்கேஜ் குறித்து விவாதித்ததாகவும் அந்த நிறுவனத்தின் அறிக்கை தெரிவிக்கிறது.

கடந்த பிப்ரவரி மாதம் பெல் நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மிர்கோ பிபிக் தங்களது நிறுவனத்தில் இருந்து 4,800 பதவிகளை நீக்கம் செய்ய இருப்பதாக அறிவித்திருந்தார், இது அந்த நிறுவனத்தின் மொத்த ஊழியர்களில் 9 சதவீதமாகும். தங்கள் நிறுவனத்தை எளிதாக்குவதற்கும் மாற்றங்களை துரிதப்படுத்துவதற்கும் தேவையான நடவடிக்கைகளுக்கு அவர் அழைப்பு கொடுத்து இருந்தார். எனினும் பெல் நிறுவனம் பங்குதாரர்களுக்கு ஈவுத்தொகையை அதிகப்படுத்தியதால் அவர்களது பணி நீக்க முடிவு விமர்சனத்திற்கு உள்ளானது.

எந்தப் பதவி மற்றும் தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்வது என்ற தெளிவான திட்டம் இல்லாமல் டிவிடெண்ட் தொகை செலுத்துவதை அதிகரிக்க இந்தத் தொழிலாளர் பணி நீக்கங்கள் கொடூரமாக நடத்தப்படுகின்றன என யூனிபோர் தொழிற்சங்கம் தெரிவித்துள்ளது.

கடந்த 2022 ஆம் வருடம் பில் நிறுவனம் 2.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை லாபம் ஈட்டியதாக அறிவித்தது. நிறுவனத்திற்கு விசுவாசமும் அர்ப்பணிப்பும் உள்ள தொழிலாளர்கள் எந்தவித நியாயமான காரணங்களும் இன்றி பணி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இதில் அதிகமான பெண்கள் வேலைய இழப்பு நடவடிக்கையால் பாதிக்கப்பட்டுள்ளனர். தகுந்த காரணம் இன்றி நாங்கள் பணிநீக்கம் செய்யப்பட்டு இருக்கிறோம் என்பதை அவர்கள் தங்களது குடும்பத்திற்கு தெரிவிக்க வேண்டும். பங்குதாரர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிக லாபம் பெறுவதற்காக தொழிலாளர்களை பணி நீக்கம் செய்வது மிகவும் அருவருப்பானது என தொழிற்சங்கம் தனது கண்டனத்தை பதிவு செய்துள்ளது.

Read More: உலகின் விலையுயர்ந்த பொருட்களின் பட்டியலில் கடைசி இடத்தில் தங்கம்… முதலிடத்தில் இருப்பது?…

Next Post

Lok Sabha 2024 | "பாஜக-விற்கு அதிமுக போட்ட பிச்சை தான் 4 எம்எல்ஏக்கள்"… சிவி சண்முகம் கடும் தாக்கு.!!

Tue Mar 26 , 2024
Lok Sabha: அதிமுக கட்சி(ADMK) தான் பாஜக-விற்கு(BJP) தமிழகத்தில் 4 எம்எல்ஏக்களை பிச்சை போட்டது என முன்னாள் அமைச்சர் சி.வி சண்முகம் விமர்சித்திருக்கிறார். 2024 ஆம் வருட பாராளுமன்ற தேர்தல்(Lok Sabha) தமிழகத்தில் ஏப்ரல் 19ஆம் தேதி ஒரே கட்டமாக நடைபெற உள்ளது. இந்த தேர்தலுக்காக தமிழகத்தில் உள்ள அரசியல் கட்சிகள் தீவிரமாக களப்பணி ஆற்றி வருகின்றன. தமிழகத்தில் திமுக அதிமுக மற்றும் பாஜக தலைமையில் கூட்டணி அமைக்கப்பட்டு இருக்கிறது. […]

You May Like