fbpx

25 கிலோவுக்கு ஜிஎஸ்டி என்பதால்.. 26 கிலோவாக பேக்கிங் செய்யும் அரிசி வியாபாரிகள்..!!

25 கிலோ வரையிலான அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அடைக்கப்பட்ட அரிசி பைகளுக்கு 5% வரி விதிப்பு உள்ளதால் பெரும்பாலான அரிசி ஆலைகள் 26 கிலோ பையாக தயாரிக்க ஆரம்பித்துள்ளனர். 47 வது ஜி.எஸ்.டி கவுன்சில் கூட்டம் சமீபத்தில் நடந்து முடிந்தது. இந்த கூட்டத்தில் அரிசி உட்பட சில பொருட்களுக்கு 5% வரி விதிப்பை மத்திய அரசு வெளியிட்டது. அதன்படி 25 கிலோ வரையிலான பைகளில் அடைக்கப்பட்ட, அடையாளமிட்ட அல்லது அடையாளம் இடப்படாத அரிசி பைகளுக்கு 5% வரி விதிக்கப்பட்டதால் அரிசியின் விலை கூடுதல் ஆனது.

ரகத்திற்கு ஏற்றபடி அரிசி உள்ள நிலையில் , தோராயமாக 1000 ருபாய்க்கு விற்கப்பட்ட 25 கிலோ அரிசி பை , 5% வரி விதிப்பிற்கு பிறகு 50 ருபாய் அதிகரித்த 1050 க்கு விற்க வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. இதன் காரணமாக வியாபாரம் பாதிக்கப்பட்டதால் இப்பொழுது புதிய முயற்சியாக 26 கிலோ அரிசி பை உற்பத்தி செய்யப்பட்டு விற்பனைக்கு வர தொடங்கியுள்ளது. உணவு துறையில் உள்ள உயர் அதிகாரிகளுடன் பேசிய பிறகே இந்த 26 கிலோ அரிசி பை நடைமுறை படுத்தியதாக வியாபாரிகள் கூறுகின்றனர். 25 கிலோ அரிசி பைக்கு பதிலாக 1 கிலோ கூடுதலாக வைத்து 26 கிலோ, அதாவது ஒரு கிலோ கூடுதலாக ஒரு அரிசி பையில் அடைக்கப்படும் போது மக்களுக்கு 50 ருபாய் குறைவாக கொடுக்க முடியும் என்கின்றனர் அரிசி வியாபாரிகள்.

மேலும் LMA Legal Metrology Act விதிகளின் படி ஒவ்வொரு 5 கிலோ எடை கொண்ட பேக்கிங் தான் செய்ய வேண்டும் என்ற விதி இருந்தது. தற்போது அந்த சரத்து ரத்து செய்யப்பட்டுள்ளது. மேலும் ஜி.எஸ்.டி விதிகளின்படி 25 கிலோவிற்கு மேல் செல்லும் போது வரிக்கு உட்படுத்த தேவையில்லை என்றும் அதிகாரிகள் தரப்பில் கூறியுள்ளனர். இதன் பிறகே இந்த நடைமுறை கொண்டு வரப்பட்டதாக அரிசி வியாபாரிகள் கூறுகின்றனர். 25 கிலோவிற்கு கீழ் உள்ளது சில்லறை வணிகம் என்றும், 25 கிலோவிற்கு மேல் உள்ளது மொத்த வியாபரம் என்றும் பிரித்துள்ளதாகவும். இந்நிலையில் ஜி.எஸ்.டி விதியின் படி அரிசிக்கு சில்லறை வர்த்தகம் செய்வதற்கு மட்டுமே 5% வரி விதித்துள்ளதாகவும், அதனால் 26 கிலோ அடைக்கப்பட்ட அரிசி விற்பனை, முழுக்கவே சட்டத்திற்கு உட்பட்டது என்றும் தெரிவிக்கின்றனர்.

Rupa

Next Post

தூங்கும்போது தொந்தரவு செய்த அண்ணன்... தம்பி செய்த செயலால் பதறும் குடும்பத்தினர்..!

Tue Aug 2 , 2022
பாலக்காடு மாவட்டம் பட்டாம்பி அருகில் உள்ள முளையன் காவில் வசிப்பவர் சர்வர் பாபு (24). இவரது தம்பி சக்கீர்(18). நேற்று இரவு 10 மணியளவில் அண்ணன் சர்வர் பாபு தனது செல்போனில் சத்தத்தமாக பாட்டு கேட்டுக் கொண்டிருந்தார். பக்கத்தில் படுத்து தூங்கிக் கொண்டிருந்த அவரது தம்பி சக்கீர், சத்தத்தை குறைத்து வை தூங்குவதற்கு தொந்தரவாக உள்ளது என கூறியுள்ளார். ஆனால் இது எதையும் காதில் வாங்காத அண்ணன் பாபு சத்தத்தை […]

You May Like