பிராட்காஸ்ட் இன்ஜினியரிங் கன்சல்டன்ஸ் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்புவதற்கான வேலைவாய்ப்பு அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. அந்த அறிவிப்பின்படி பிஇசிஐஎல் நிறுவனத்தில் காலியாக உள்ள நிர்வாக உதவியாளர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை அந்நிறுவனம் வெளியிட்டு இருக்கிறது. இந்த அறிவிப்பின்படி நிர்வாக உதவியாளர் பணிக்கு மூன்று காலியிடங்கள் உள்ளன அவற்றை நிரப்புவதற்கு தகுதியும் திறமையும் வாய்ந்த விண்ணப்பதாரர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க விரும்புவோர் அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ/ பி.ஜி.டி.எம் பட்டம் பெற்றிருக்க வேண்டும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க உச்சபட்ச வயது வரம்பு 35 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு தேர்வு செய்யப்படுவோருக்கு ஊதியமாக ரூ.70,000/ வரை வழங்கப்படும் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிக்க வேண்டிய கடைசி நாள் 19.04.2023 ஆகும். இந்த வேலை வாய்ப்பிற்கு விண்ணப்பிப்பதற்கு பதிவு கட்டணமாக பொதுப் பிரிவினருக்கு 885 ரூபாயும் எஸ்.சி மற்றும் எஸ்.டி பிரிவினருக்கு 531 ரூபாயும் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பிற்கு ஆன்லைன் மூலமாக மட்டுமே விண்ணப்பிக்க முடியும். விண்ணப்பதாரர்கள் தேர்வு மற்றும் நேர்காணல் முறையில் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என அந்த அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த வேலை வாய்ப்பினை பற்றிய பிற தகவல்களை அறிய becil.com என்ற இணையதள முகவரியில் சென்று தெரிந்து கொள்ளலாம்.