fbpx

40 குழந்தைகளின் தலை துண்டிப்பு!… உயிருடன் எரித்து கொடூரம்!… ஹமாஸ் பயங்கரவாதிகள் வெறியாட்டம்!

இஸ்ரேலில் ஹமாஸ் பயங்கரவாதிகள், 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும் சிலரை உயிருடன் எரித்தும் கொலை செய்யப்பட்ட கொடூரமான சம்பவம் நிகழ்ந்துள்ளதாக உள்ளூர் ஊடகங்கள் கூறுகின்றன.

இஸ்ரேல்-பாலஸ்தீனம் ஆகியவை அண்டை நாடுகளாக உள்ளன. இதில் காசா எனும் பகுதி பாலஸ்தீனத்தில் உள்ளது. இந்த காசா பகுதி பாலஸ்தீனத்தின் ஆதரவு பெற்ற ஹமாஸ் தீவிரவாதிகளின் கட்டுப்பாட்டில் உள்ளது. ஒரு காலத்தில் இந்த காசா இஸ்ரேல் வசம் இருந்த நிலையில் தற்போது அதனை மீண்டும் கைப்பற்ற அந்நாடு முயற்சி செய்கிறது. இஸ்ரேலின் இந்த நடவடிக்கைக்கு ஹமாஸ் அமைப்பு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

இதனால் தான் ஹமாஸ் அமைப்பை தீவிரவாத அமைப்பாக இஸ்ரேல் அறிவித்துள்ளது. இதற்கிடையே தான் பாலஸ்தீனத்தின் ஹமாஸ் தீவிரவாத அமைப்புக்கும், இஸ்ரேலுக்கும் இடையே அடிக்கடி மோதல் ஏற்பட்டு வருகிறது. ஏவுகணை உள்ளிட்டவைகளை கொண்டு மிகப்பெரிய தாக்குதலில் ஈடுபட்டு வரும் ஹமாஸ் பயங்கரவாதிளால், இதுவரை ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பலியாகியுள்ளனர். கடந்த சில நாட்களுக்கு முன்னதாக, இஸ்ரேல் ராணுவத்தின் பெண் வீராங்கனையை கொன்று நிர்வாணப்படுத்தி பாலஸ்தீனியர்கள் ஊர்வலம் சென்றதாக வீடியோ ஒன்று இயைதளங்களில் பரவி வருகிறது. இது உலகம் முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது.

இதுபோதாது என்று, ஹமாஸ் அமைப்பின் வெறியாட்டம் இன்னும் அடங்கவில்லை. அதாவது, இஸ்ரேலில் உள்ள கஃபர் ஆசா பகுதியில் 40க்கும் மேற்பட்ட குழந்தைகளின் தலையை துண்டித்தும், சிலரை உயிருடன் எரித்தும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கொலை செய்ததாக உள்ளூர் ஊடங்களில் ஒன்றான i24ல் செய்திகள் வெளியாகியுள்ளன.

மேலும் இதுகுறித்து பேசிய IDF மேஜர் ஜெனரல் Itai Veruv, “இது ஒரு போர் அல்ல, இது ஒரு போர்க்களம் அல்ல, இது ஒரு படுகொலை” என்று கூறினார். என் வாழ்நாளில் நான் பார்த்திராத ஒன்று. மேலும் ஹமாஸ் பயங்கரவாதிகள் கிராமத்தை நாசமாக்கியதாகவும், வீடுகள் மற்றும் வாகனங்களையும் எரித்ததாகவும் மேலும் காற்றில் இறந்தவர்களின் உடல்களில் இருந்து துர்நாற்றம் அதிகமாக இருந்தது என்று ராய்ட்டர்ஸ் தெரிவித்துள்ளது.

Kokila

Next Post

காலையில் பழைய சாதம் சாப்பிடுவதால், இளமையான தோற்றம் ஏற்படுமா....?

Wed Oct 11 , 2023
கிராமப்புறங்களில், இன்றளவும் பயன்படுத்தப்பட்டு வரும் பழைய சாதம் உடலுக்கு நன்மை தரும் பல்வேறு பாக்டீரியாக்கள் இருக்கிறது என்று சொன்னால் உங்களால் நம்ப முடிகிறதா? காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, உடலில் உள்ள உஷ்ணம் நீங்கி, குளிர்ச்சியான சூழல் ஏற்படுவதற்கான வாய்ப்பு உள்ளது. காலை வேளையில், பழைய சாதத்தை சாப்பிடுவதன் மூலமாக, வயிறு குறித்த பல்வேறு நோய்கள் குணமாகும் என்று தெரிகிறது. அதேபோல, தோல் குறித்த பிரச்சனைகள் இந்த […]

You May Like