fbpx

BEL நிறுவனத்தில் வேலை வாய்ப்பு…! மாதம் ரூ.70,000 ஊதியம்…! ஆர்வம் உள்ளவர்கள் உடனே விண்ணப்பிக்கவும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Web Developer, Manager, HR Executive, IT Executive மற்றும் Maintenance Supervisor பணிக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு என 6 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 32 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு 5 ஆண்டுகள் அனுபவம் இருக்க வேண்டும். விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.70,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. ஆர்வம் உள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் ஆகஸ்ட் 2-ம் தேதி மாலைக்குள் விண்ணப்பிக்க வேண்டும். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For More Info: https://www.becil.com/uploads/vacancy/345NITIEMUMBAI18July23pdf-42c0ba430b2517f20bd6bdcb9520c4c2.pdf

Vignesh

Next Post

பிறந்து ஒரு மாதமே ஆன பச்சிளம் குழந்தையை பிளேடால் கழுத்தை அறுத்து துடிக்க துடிக்க கொலை செய்த தாய்……! காரணம் என்ன…..?

Sun Jul 30 , 2023
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே இருக்கின்ற சல்லக்குளம் பகுதியைச் சேர்ந்தவர் சிவராஜ் இவர் எலக்ட்ரீசியன் ஆக பணியாற்றி வருகிறார். இவருடைய மனைவி ஜீவிதா தனியார் மருத்துவமனையில் செவிலியராக பணியாற்றி வருகின்றார். இருவருக்கும் திருமணமாகி 8 வருடங்கள் ஆன நிலையில், குழந்தை இல்லாமல் தவித்து வந்ததாக சொல்லப்படுகிறது. இந்த நிலையில், இவர்களுக்கு கடந்த மாதம் ஒரு ஆண் குழந்தை பிறந்தது. அந்த குழந்தைக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டு அடிக்கடி அழுவதாலும், சரும […]

You May Like