fbpx

BEL நிறுவனத்தில் ரூ.40,000 ஊதியத்தில் வேலைவாய்ப்பு…! நாளைக்குள் விண்ணப்பிக்க வேண்டும்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் Trainee Engineer மற்றும் Project Engineer பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என 260 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் B.E, B.Tech தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு 28 வயதிற்குள் இருக்க வேண்டும். பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.40,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. 500 ரூபாய் விண்ணப்ப கட்டணம் செலுத்த வேண்டும். விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க நாளை தான் கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://www.bel-india.in/Documentviews.aspx?fileName=DETAIL%20ADVERTISEMENT-29-11-22.pdf

Vignesh

Next Post

காதலியை வெட்டிக் கொன்ற அஃப்தாபுக்கு 20 பெண்களுடன் தொடர்பு..!! உண்மை கண்டறியும் சோதனையில் அதிர்ச்சி தகவல்..!!

Thu Dec 1 , 2022
டெல்லியில் காதல் ஜோடி லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்த நிலையில், ஷரத்தா என்ற இளம்பெண்ணை காதலன் அஃப்தாப் 35 துண்டுகளாக வெட்டிக் கொலை செய்த சம்பவம் நாடு முழுவதும் அதிர்வலையை ஏற்படுத்தியது. இருவருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டதில் ஆவேசமடைந்த காதலன், காதலியின் கழுத்தை நெறித்து கொலை செய்தார். பிறகு ஹாலிவுட் கிரைம் படம் பார்த்து காதலியின் உடலை 35 துண்டுகளாக வெட்டியுள்ளார். பின்னர் கொதிக்கும் தண்ணீரில் ப்ளீச்சிங் பெளடரை போட்டு, […]

You May Like