fbpx

BEL நிறுவனத்தில் Diploma முடித்த நபர்களுக்கு வேலைவாய்ப்பு…! மாதம் 8,000 ரூபாய் ஊதியம்…! ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம்…!

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் தேசிய பயிற்சி ஊக்குவிப்பு திட்டத்தின் (NAPS) கீழ் Bharat Electronics Limited நிறுவனத்தில் இருந்து ஒரு புதிய வேலைவாய்ப்பு அறிவிப்பு வெளியாகியுள்ளது. அந்த அறிவிப்பில் சென்னையில் உள்ள அலுவலகங்களில் Technician Apprentices பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த பணிகளுக்கு என மொத்தம் 10 காலிப்பணியிடங்கள் ஒதுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. பணிக்கு விண்ணப்பிக்க ஆர்வமுள்ள நபர்கள் மத்திய மாநில அரசின் கல்வி நிலையங்களில் Diploma தேர்ச்சி பெற்றிருந்தால் போதுமானது.

விண்ணப்பதாரர்களுக்கு பிரிவிற்கு ஏற்றாற்போல் வயது தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ளது. பணிக்கு முன் அனுபவம் இருக்க வேண்டிய அவசியம் இல்லை. விண்ணப்பித்து தேர்வு செய்யப்படும் நபர்களுக்கு மாதம் அதிகபட்சம் ரூ.8,000 ஊதியம் வழங்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது. விருப்பமுள்ளவர்கள் கீழே வழங்கப்பட்டுள்ள ஆன்லைன் இணைய முகவரி மூலம் இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்க 28 தேதி கடைசி நாள். எனவே, தகுதியும், விருப்பமும் உள்ள நபர்கள் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த பணி தொடர்பான வேறு ஏதாவது தகவல் தேவைப்பட்டால் கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைப்பை பயன்படுத்தி தெரிந்து கொள்ளலாம்.

For more info: https://drive.google.com/file/d/1X6a3akXOZHrgmUZ6d4YXrYd0WgswYbHI/view?usp=sharing

Vignesh

Next Post

பழைய ரெக்கார்டை ஓரங்கட்டிய நீரஜ் சோப்ரா..! டயமண்ட் லீக்கில் புதிய சாதனை..!

Sat Aug 27 , 2022
லூசேன் டயமண்ட் லீக்கில் ஈட்டி எறிதல் பிரிவில் இந்தியாவின் நீரஜ் சோப்ரா முதல் இடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். சுவிட்சர்லாந்தின் லாசேன் நகரில் டயமண்ட் லீக் மீட் சர்வதேச தடகளப் போட்டி நடைபெற்றது. இதில், இந்தியாவைச் சேர்ந்த ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா பங்கேற்றார். இந்நிலையில், நீரஜ் சோப்ரா 89.08 மீட்டர் தூரம் ஈட்டி எறிந்து சாம்பியன் பட்டத்தை வென்று சாதனை படைத்துள்ளார். இதன் மூலம் டயமண்ட் லீக் […]
வரலாற்று சாதனை படைத்த நீரஜ் சோப்ரா..! சாம்பியன் பட்டம் வென்று புதிய சாதனை..!

You May Like