fbpx

2 மணி ஆனா இங்கு மழை தான்.. பல வியப்பூட்டும் கலாச்சாரம் கொண்ட நகரம் எங்க இருக்கு தெரியுமா?

ஒரு சில மாதங்கள் வெயில் அடித்தால் அடுத்த சில மாதங்கள் மழை பொழியும் என்பதுதான் இயற்கை. ஆனால் ஒரு நகரத்தில் மட்டும் தினம்தோறும் ஒரே நேரத்தில் மழை பொழியும் என்றால் உங்களால் நம்ப முடியுமா? பெலேம் என்ற நகரத்தில் தான் இந்த அதிசயம் நடந்துக்கொண்டிருக்கிறது. பெலேம் என்பது பிரேசிலின் பரபரப்பான துறைமுகங்களில் ஒன்றாகும். இங்கு தினமும் மதியம் 2 மணிக்கு மேல் மழை பொழிய தொடங்கிவிடுமாம்.

பெலேம் சிறிய தீவு ஒன்றில் அமைந்துள்ளது. 1616 ஆம் ஆண்டு நிறுவப்பட்ட பெலேம், மில்லியன் கணக்கான மக்களை கொண்ட ஒரு பெரிய நகரமாகும். நகரின் புதிய பகுதியில் நவீன மற்றும் வானளாவிய கட்டிடங்கள் உள்ளன. இங்கு கண்ணை கவரும் கலைநயத்துடன் கூடிய ஆலயங்கள் கட்டப்பட்டுள்ளன. உலகிலேயே மிக பிரபலமான மழைக்காடுகளுக்கு நடுவில் இந்நகரம் அமைந்திருப்பதால் தினமும் மழை பெய்யும்.

பெலேமில் தினமும் 2 மணிக்குமழை பொழியும். ஆனால் காலநிலை மாற்றம் இந்த நகரத்தின் அன்றாட வாழ்க்கையை மாற்றியுள்ளது. இங்கு தொடர்ந்து பொழியும் மழை காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்பட்டு நகரம் முழுவதும் தண்ணீர் தேங்குகிறது. வளமான வரலாறு, வியப்பூட்டும் கலாச்சாரம், பிரமிக்க வைக்கும் இயற்கை அழகு ஆகியவற்றுடன், பெலேம் விருந்தினர்களுக்கு உண்மையிலேயே தனித்துவமான அனுபவத்தை வழங்கும் என்பதில் மாற்று கருத்தே இல்லை.

Read more ; சென்னை திரும்பும் பயணிகளே.. கடைசி நேரத்தில் டிக்கெட் கன்பார்ம் ஆகலையா? ரயில்வே-யின் சூப்பர் அறிவிப்பு

Next Post

உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தரவரிசையில் இரண்டாம் இடத்திற்கு தள்ளப்பட்ட இந்தியா..!!

Sun Nov 3 , 2024
India lose top spot to Australia in World Test Championship standings, slip to second spot

You May Like