fbpx

அவர் நன்றி மறந்தவர்…..! ஆஸ்கர் விருது பெற்ற இயக்குனரை சாடிய தம்பதிகள்……!

சமீபத்தில் தமிழகத்திற்கு வந்த குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, முதுமலை வனப்பகுதிக்கு சென்று, அங்குள்ள யானை பாகன்களிடம் உரையாடினார். அதன் பிறகு, ஆஸ்கர் விருது பெற்ற திரைப்படமான, தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் திரைப்படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் உள்ளிட்ட தம்பதிகளை சந்தித்து அவர்களுடன் கலந்துரையாடினார்.

இந்த நிலையில் தான், அந்த ஆவணப்படத்தில் நடித்த பெள்ளி மற்றும் பொம்மன் உள்ளிட்ட இருவரும், அந்த திரைப்படத்தின் இயக்குனர் கார்த்திகி கோன்சால்வ்ஸ் மீது, பல்வேறு குற்றச்சாட்டுகளை முன் வைத்திருக்கிறார்கள்.

அதாவது, ஆஸ்கர் விருது வென்ற தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் திரைப்படம் முதுமலையில் இருக்கின்ற யானை பாகன்களின் வாழ்க்கை முறையை அடிப்படையாகக் கொண்டு, உருவாக்கப்பட்ட ஒரு ஆவணப்படமாகும்.

இந்தத் திரைப்படத்திற்கு ஆஸ்கர் விருது கிடைத்தது மிகப்பெரிய விஷயம் என்று சொல்லப்படுகிறது. இந்த நிலையில் தான், இந்த ஆவணப்படத்தின் படப்பிடிப்பின் போது, அந்த திரைப்படத்தின் இயக்குனர் தங்களுடன் மிகவும், நெருக்கமாக பழகியதாகவும், ஆனால் ஆஸ்கர் விருது வென்ற பின்னர், அவர் தங்களை முற்றிலுமாக மறந்துவிட்டார் எனவும் பொம்மன் மற்றும் பெள்ளி தம்பதியினர் தெரிவித்துள்ளனர்.

அதோடு, அந்த திரைப்படத்தின் இயக்குனர், தங்களுடைய தொலைபேசி அழைப்புகளை கூட எடுப்பதில்லை எனவும், இதுவரையில் தங்களுக்கு வழங்கப்பட வேண்டிய பணமும், வழங்கப்படவில்லை என்றும் கூறியிருக்கிறார்கள். அத்தோடு, படபிடிப்பு நடைபெற்றுக் கொண்டிருந்த போது, இயக்குனர் தங்களிடம் வந்து திருமண காட்சிகளை படமாக்க வேண்டும் எனவும், தன்னிடம் பணம் இல்லை என்றும் ஆகவே நீங்கள் செலவு செய்து இதனை முடித்துக் கொடுங்கள் என்றும் தெரிவித்ததாக, இருவரும் கூறி உள்ளனர்.

மேலும் பேசிய அவர்கள், இயக்குனர் இப்படி கூறியதால், தங்களுடைய பேத்தியின் படிப்பிற்காக சேமித்து வைத்திருந்த பணத்தை, நாங்களே எடுத்து அவர்களிடம் வழங்கினோம் எனவும், திருமண நிகழ்ச்சிக்கு சுமார் ஒரு லட்சம் ரூபாய் வரைவில், செலவு செய்திருக்கிறோம் எனவும் இருவரும் தெரிவித்திருக்கிறார்கள். அதோடு, அந்த தொகையை அவர் திரும்பி கொடுப்பதாக சொன்னதாகவும், ஆனால் இதுவரையில் திருப்பிக் கொடுக்கவில்லை என்றும் இருவரும் தெரிவித்திருக்கின்றனர்.

மேலும் தாங்கள் கைபேசியின் மூலமாக அழைத்த போது, அவர் பிஸியாக உள்ளதாகவும், அதன் பிறகு அழைப்பதாக தெரிவித்து, அழைப்பை துண்டித்து விட்டதாகவும் இருவரும் கூறி உள்ளனர். ஆகவே அந்த தம்பதிகள், எங்களால் தான், அவர் இந்த திரைப்படத்திற்காக ஆஸ்கர் விருதை பெற்றுள்ளார் எனவும், அந்த திரைப்படத்திற்க்கு பிறகு, நாங்கள் நிம்மதி இழந்து விட்டோம் என்றும் அந்த தம்பதிகள் இருவரும் கூறி இருக்கிறார்கள்.

ஆனால், தி எலிபன்ட் லிஸ்பரர்ஸ் திரைப்படத்தின் தயாரிப்பு நிறுவனம், இந்த தம்பதிகளின் குற்றச்சாட்டை முற்றிலுமாக மறுத்திருக்கிறது. இருவரும் உண்மைக்கு புறம்பான விஷயங்களை தெரிவிக்கிறார்கள் எனவும், வனத்துறை மற்றும் வன விலங்குகள் பாதுகாப்புக்காக அவர்கள் செய்து வரும் பணிகளை பாராட்டுவதற்காகவே இந்த திட்டத்தை ஆரம்பித்ததாகவும் தெரிவித்துள்ளது.

Next Post

100 நாள் வேலை திட்டத்தில் 3.06 கோடி பேர் இதுவரை பயனடைந்து உள்ளனர்...!

Mon Aug 7 , 2023
மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டத்தின் கீழ் பணிபுரிபவர்கள். மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதியளிப்புத் திட்டம் தேவையை அடிப்படையாகக் கொண்ட திட்டமாகும். பதிவு செய்யப்பட்ட குடும்பங்கள் திட்டத்தின் விதிகளின்படி வேலைக்கு விண்ணப்பிக்கலாம்.மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தின் கீழ் 2020-21 நிதியாண்டு வரை மொத்தம் 2.95 கோடி பேர் 18-30 வயதுக்குட்பட்டவர்களாக பதிவு செய்யப்பட்டனர், இது 2022-23 நிதியாண்டு வரை 3.06 […]

You May Like